×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெற்றோர்கள் உஷார்... சில நொடியில் தலைகீழான மாறிய நிலை! ஸ்கூட்டியில் அமர்ந்த சிறுமி செய்த விபரீதம்... அதிர்ச்சி வீடியோ..!!!

இருசக்கர வாகனத்தில் குழந்தையை தனியாக அமர வைத்ததால் சில நொடிகளில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது. பெற்றோர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இருசக்கர வாகனங்களில் குழந்தைகளை தனியாக அமர வைப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்தும் வைரல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சில நொடிகள் ஏற்பட்ட கவனக்குறைவே பெரிய விபத்தாக மாறிய காட்சிகள், பெற்றோர்கள் மத்தியில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

சில நொடிகளில் தலைகீழான நிலை

வீடியோவில், ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் இரண்டு குழந்தைகளுடன் வந்து நிறுத்துகிறார். பின்னர் ஒரு குழந்தையை மட்டும் கீழே இறக்கிவிட்டு, மற்றொரு சிறுமியை வாகனத்திலேயே அமர வைத்தபடி அங்கிருந்து சில அடிகள் தள்ளிச் செல்கிறார்.

அந்த நேரத்தில் எதிர்பாராத வகையில் சிறுமி வாகனத்தின் எக்ஸிலேட்டரைத் திருகியதால், வாகனம் திடீரென முன்னோக்கி சீறிப் பாய்கிறது. கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சில நொடிகளிலேயே விபத்துக்குள்ளாகும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.

இதையும் படிங்க: தடுப்புச் சுவரில் தண்ணீர் குடிக்க அமறும் போது தலை குப்புற கீழே விழுந்த நபர்! வைரல் வீடியோ தரும் எச்சரிக்கை!!!

24 நொடிகள் வீடியோ ஏற்படுத்திய விழிப்புணர்வு

சுமார் 24 நொடிகள் ஓடும் இந்த காட்சி, @gharkekalesh என்ற எக்ஸ் தளப் பக்கத்தில் பகிரப்பட்டு அதிகளவில் கவனம் பெற்றுள்ளது. வாகனத்தை நிறுத்திய உடனே சாவியை அகற்றியிருந்தாலோ அல்லது குழந்தையை தனியாக அமர வைக்காமல் இருந்திருந்தாலோ இந்த நிலையைத் தவிர்த்திருக்க முடியும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பெற்றோருக்கு முக்கிய எச்சரிக்கை

குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த வீடியோவைப் பார்த்த சமூக வலைதள பயனர்கள், வாகனத்தை நிறுத்தியதும் சாவியை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், குழந்தைகளை எந்த சூழலிலும் தனியாக இருசக்கர வாகனத்தில் விட்டுச் செல்லக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: அதுக்குள்ள போய் தலையை விடலாமா... 30 லட்சம் பேர் பார்த்த பயங்கரம்..! மலைப்பாம்புக்குள் தலையை விட்ட நபர்...! பகீர் வீடியோ..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#viral video #இருசக்கர வாகனம் #child safety #சாலை பாதுகாப்பு #bike accident
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story