×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெண்களே எக்கச்சக்க எளிமையான கிட்சன் டிப்ஸ்! வீடியோவ பார்க்க மிஸ் பண்ணிட்டாத்தீங்க.....

இல்லத்தரசிகளுக்கான பயனுள்ள சமையல் டிப்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எளிய முறையில் காய்கறி, பழம், நட்ஸ் ஆகியவற்றை பாதுகாக்கும் வழிகள்.

Advertisement

சமையலறையில் எளிமையான முறையில் பொருட்களை நீண்ட நாட்கள் பசுமையாக வைத்திருக்க சில பயனுள்ள சமையல் டிப்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இல்லத்தரசிகளுக்கு அன்றாட வாழ்க்கையில் உதவும் இந்த வழிகள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கொத்தமல்லி மற்றும் புதினா பாதுகாப்பு

புதியதாக இருக்கும் கொத்தமல்லி, புதினாவை ஓட்டைகள் உள்ள பாத்திரத்தில் வைத்து, மேலே டிஷ்யூ பேப்பர் போட்டு மூடினால் பல நாட்கள் பசுமையாக இருக்கும். அதேபோல், தக்காளி அழுகாமல் இருக்க அதன் மேல் பகுதியில் சிறிது எண்ணெய் தடவினால் குளிர்சாதன பெட்டி இல்லாமலேயே பாதுகாக்கலாம்.

நட்ஸ் மற்றும் அரிசி பாதுகாப்பு

நட்ஸ் வகைகளில் ஈரப்பதம் வராமல் தடுக்க, ஒரு டிஷ்யூ பேப்பரில் சிறிது அரிசி மடித்து, நட்ஸ் உள்ள டப்பாவில் வைக்கலாம். மேலும், அரிசியில் பூச்சி வராமல் தடுக்க, பிரியாணி இலை, கிராம்பு, வத்தல் போன்றவற்றை அரிசியில் புதைத்து வைத்தால் போதும். இது பூச்சிகளை விரட்ட சிறந்த முறையாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க: அப்படியே வடிவேலு மாறியே இருக்கே! ரெடின் கிங்ஸ்லி மனைவியின் காமெடி வீடியோ! இணையத்தில் வைராலாகும் காணொளி...

எலுமிச்சை பழம் பசுமையாக வைக்க

எலுமிச்சை பழத்தை ஒரு வாரம் வரை வாடாமல் வைக்க, அதை தண்ணீரில் மூழ்க வைத்து வைப்பது பயனுள்ளதாக இருக்கும். இதனால் குளிர்சாதன பெட்டி தேவையில்லை.

இந்த எளிய மற்றும் பயனுள்ள Kitchen Hacks அடங்கிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இல்லத்தரசிகளுக்கு வாழ்க்கையை எளிதாக்கும் இந்த குறிப்புகள் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.

 

இதையும் படிங்க: ஓ... இப்படி தானா... மோதிர கண்ணி! தானாக வெப்பமாகும் தகடு! அது எப்படின்னு நீங்களே பாருங்க....

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#இல்லத்தரசிகள் Tips #viral video #காய்கறி பாதுகாப்பு #Kitchen Hacks #tamil news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story