ஊரடங்கால் பிறந்தநாளன்று ஏங்கிய சிறுவன்.! இன்ப அதிர்ச்சி கொடுத்த காவல்துறையினர்..! நெகிழ்ச்சி சம்பவம்.
US police wishes happy birthday to a boy
தனது பிறந்த நாளுக்கு யாருமே வாழ்த்து கூறவில்லையே என ஏங்கிய சிறுவனுக்கு அமெரிக்கா போலீசார் கொடுத்துள்ள இன்ப அதிர்ச்சி அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
கொரோனா காரணமாக பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவிலும் ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது. அமெரிக்காவில் இதுவரை 742,459 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 39,651 பேர் இதுவரை உயிர் இழந்துள்ளனனர்.
இந்நிலையில், கொரோனா காரணமாக தனது பிறந்த நாளுக்கு யாரும் வாழ்த்து சொல்ல தனது வீட்டிற்கு வரவில்லையே என அமெரிக்காவை சேர்ந்த சிறுவன் ஒருவன் மிகவும் சோகமாக இருந்துள்ளான். மகன் சோகமாக இருப்பதை உணர்ந்த தந்தை இதுகுறித்து அந்த பகுதி போலீசாருக்கு போன் செய்து விவரத்தை கூறியுள்ளார்.
சிறுவனை மகிழ்விப்பதற்காகவும், அவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காகவும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான போலீசார் போலீஸ் வாகனத்தில் அணிவகுத்து வந்து அந்த சிறுவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளனர். எதிர்பாராத இந்த வாழ்த்தால் சிறுவன் இன்ப அதிர்ச்சியடைந்த காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
மேலும், இந்த இக்கட்டான சூழலிலும் சிறுவனின் மனநிலையை உணர்ந்து அவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிய போலீசாரையும் பொதுமக்கள் வாழ்த்திவருகின்றனர்.