மோசமான நிலையில் அமெரிக்கா! டிரம்பின் ருத்ரதாண்டவம்.... 2026-ல் படிப்படியாக காத்திருக்கும் பேராபத்து!!!
2025 நான்காம் காலாண்டில் அமெரிக்க GDP வளர்ச்சி 0.5% ஆக சரிந்தது. முதலீடு, நுகர்வு குறைவு காரணமாக பொருளாதார மந்தநிலை தீவிரமடைந்துள்ளது.
அமெரிக்காவில் பொருளாதார சிக்னல்கள் எதிர்பாராத முறையில் பலவீனமாகத் தோன்றுகின்றன. 2025ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் அமெரிக்க GDP வளர்ச்சி வெறும் 0.5% ஆக சரிந்துள்ளது. முந்தைய காலாண்டின் 4.4% வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் இது பெரிய வீழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.
முதலீட்டு மந்தநிலை – முக்கிய காரணம்
இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக தனியார் முதலீடுகளில் ஏற்பட்ட மந்தநிலை குறிப்பிடப்படுகிறது. புவிசார் அரசியல் பதற்றங்களும், கொள்கை நிலைத்தன்மையின்மையும் வணிக நிறுவனங்களை எச்சரிக்கையுடன் இருக்கச் செய்துள்ளன. தகவலின்படி, நிறுவனங்கள் புதிய முதலீடுகளை தள்ளிப்போடத் தொடங்கியுள்ளன.
நுகர்வோர் செலவில் சரிவு
அமெரிக்க பொருளாதாரத்தின் முதுகெலும்பான Consumer Spending கூட கணிசமாகக் குறைந்துள்ளது. 3.5% இருந்த செலவின வளர்ச்சி 1.9% ஆக சரிந்துள்ளது. இதையடுத்து உள்நாட்டு தனியார் கொள்முதல் வளர்ச்சியும் 4.5% இலிருந்து 0.3% ஆக வீழ்ந்துள்ளது. இந்த மாற்றம் பல துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: இதுதான் சரியான நேரம்.....ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,120 குறைந்த தங்கம் விலை.! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..!!!
2026 தொடக்கம் முதல் சவால்
அரசு நிர்வாக சிக்கல்களால் தாமதமாக வெளியான இந்த தரவுகள், 2026ஆம் ஆண்டை அமெரிக்கா பலவீனமான நிலையில் தொடங்கியிருப்பதை காட்டுகின்றன. குறிப்பாக, ஈரானுடன் நிலவும் பதற்றம் அதிகரிக்கும் முன்பே பொருளாதாரம் இவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது கவலைக்குரியது. ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாகும் முதல் காலாண்டு தரவுகள் மீது உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது.
பெடரல் ரிசர்வ் முன் இரட்டை சவால்
தற்போதைய சூழலில் Federal Reserve வங்கிக்கு கடினமான நிலை உருவாகியுள்ளது. ஒருபுறம் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. மறுபுறம் மந்தமடைந்த பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டிய அழுத்தமும் உள்ளது. இதனால் அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வது சவாலான பணியாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: BREAKING : அடியோடு சரிந்த தங்கம் விலை! காலை, மாலை 2 முறை சரிவு! சவரனுக்கு ரூ.7,600 குறைவு.... குஷியில் இல்லத்தரசிகள்..!!!