×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கனரக லாரி ஓட்டுனருக்கு 110 வருடங்கள் சிறை.. தண்டனையை குறைக்க 2 மில்லியன் மக்கள் கையெழுத்து..! காரணம் தெரியுமா?..!

கனரக லாரி ஓட்டுனருக்கு 110 வருடங்கள் சிறை.. தண்டனையை குறைக்க 2 மில்லியன் மக்கள் கையெழுத்து..! காரணம் தெரியுமா?..!

Advertisement

110 வருட சிறை தண்டனை பெற்ற ஓட்டுனரின் தண்டனையை குறைக்க 2 மில்லியன் மக்கள் கையெழுத்து இட்டு கோரிக்கை வைத்துள்ளனர். ஓட்டுனரின் இறுதி கண்ணீர் கோரிக்கையும் சட்டத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாநிலத்தின் தேசிய நெடுஞ்சாலையில், கடந்த 2019 ஆம் வருடம் 18 சக்கர கனகர வாகனத்தின் பிரேக் பழுதாகி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், 4 மக்கள் உயிரிழந்த நிலையில், 28 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும், 20 க்கும் மேற்பட்ட வாகனங்கள் அப்பளம் போல நொறுங்கியது. 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கனகர லாரியின் ஓட்டுநராக பணியாற்றிய ரோஜெல் லாசாரோ அகுலேரா-மெடெரோஸ் (Rogel Lazaro Aguilera-Mederos) என்பவரை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணையின் இறுதி தீர்ப்பில், நீதிபதிகள் ஓட்டுனருக்கு 110 வருட சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டனர். 

மேலும், ஓட்டுநர் ரோஜெல் லாசாரோ மீது பதிவு செய்யப்பட்ட வாகன கொலை, கவனக்குறைவாக வாகனம் இயக்குதல் உட்பட 42 வழக்குகளின் கீழ் குற்றவாளி என உறுதிப்படுத்தப்பட்டதால் 110 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 110 வருட சிறை தண்டனையை குறைக்க கூறி ஓட்டுநர் சார்பில் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில், அவர் நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்டார். 

அப்போது, கண்ணீருடன் நீதிபதியிடம் மன்னிப்பு கேட்ட ஓட்டுநர், "நான் வாழ்ந்தாலும் இருந்துகொண்டு இருக்கிறேன். பெரும் அதிர்ச்சியுடன் என்னால் வாழ இயலாது. அது கடினம். என்னால் தினமும் உறங்கக்கூட முடியவில்லை. பாதிக்கப்பட்டவர்களை பற்றி அனுதினமும் நினைக்கிறன். அது ஒரு பெரும் பயங்கர விபத்து தான். விபத்துக்கு நான் பொறுப்பேற்கிறேன். வாகனத்தில் பிரேக் திடீரென பழுதானதன் காரணமாகவே அது நிகழ்ந்தது" என்று தெரிவித்தார். 

இதனைக்கேட்ட தலைமை நீதிபதி ஏ புரூஸ் ஜோன்ஸ், எனக்கு தண்டனையை குறைக்க அதிகாரம் கிடையாது. மாநிலத்தின் குறைந்தபட்ச தண்டனை சட்டமும் இதுதான் என்று தெரிவித்துவிட்டார். அங்குள்ள, லத்தின் சிவில் உரிமைகள் அமைப்பு LULAC தேசிய தலைவர் டொமிங்கோ கார்சியா சார்பில், ஓட்டுனருக்கு ஆதரவு தெரிவித்து ஒரு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

சுமார் 2 மில்லியன் மக்களிடம் ஓட்டுனரின் தண்டனையை குறைக்க கூறி கோரிக்கை வைத்து, அவர்களிடம் கையெழுத்து பெற்ற ஆவணமும் சமர்ப்பிக்கப்பட்டது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#us #America #Colorado #world #driver #jail #Tamil Spark
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story