×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஈரானிய விமானப்படையை பலப்படுத்துகிறது ரஷ்யா; அமெரிக்கா குற்றச்சாட்டு...!

ஈரானிய விமானப்படையை பலப்படுத்துகிறது ரஷ்யா; அமெரிக்கா குற்றச்சாட்டு...!

Advertisement

ரஷிய, உக்ரைன் ஆக்கிரமிப்பிற்கு, ஈரான் உதவி செய்து வருகிறது. ரஷ்யா ஈரானுக்கு ராணுவ மற்றும் தொழில்நுட்ப ஆதரவை அளித்து வருகிறது.

ரஷியா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள நிலையில், ஈரான் ரஷ்யாவிற்கு  நூற்றுக்கணக்கான தாக்குதல் ட்ரோன்களை, வழங்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஆழமான பாதுகாப்பு கூட்டணி, உக்ரைன் மீதான ரஷிய ஆக்கிரமிப்பிற்கு ஈரான் உதவுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

மேலும் நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷ்யாவுக்கு விற்பனை செய்ய ஈரான் முடிவேடுத்துள்ளதாக அமெரிக்க கூறியுள்ளது. இதை தொடர்ந்து, ஈரானிய நிறுவனங்கள் மற்றும் அதன் அமைப்புகளுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா அண்மையில் வெளியிட்டது. 

இதையடுத்து, வாஷிங்டனில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது;- ரஷியா, முன்னெப்போதும் இல்லாத வகையில், ஈரானுக்கு ராணுவ மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்கி வருவதாக கூறியுள்ளார். போர் விமானங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள், ராணுவ ஹெலிகாப்டர்கள் உட்பட மேம்பட்ட ராணுவ உதவிகளை ஈரானுக்கு வழங்க ரஷ்யா முடிவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அமெரிக்க உளவுத்துறை தகவல்களின்படி ரஷ்யா, ஈரானிய விமானிகளுக்கு சுகோய்-35 ரக போர் விமான பயிற்சியை அளித்து வருகிறது என்றும், அடுத்த வருடத்திற்குள் ரஷ்யாவிடம் இருந்து போர் விமானங்களை ஈரான் பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்த போர் விமானங்கள் அந்த பிராந்திய அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது ஈரானின் விமானப்படையை பலப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#russia #iran #Air force #usa #America
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story