×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Video: உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு தொடங்கியது.. வெடிக்கும் குண்டுகள், பகீர் வீடியோ..!

#Video: உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு தொடங்கியது.. வெடிக்கும் குண்டுகள், பகீர் வீடியோ..!

Advertisement

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர் தனியாக பிரிந்த நாடுகளை ரஷியா ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறாக பிரிந்து சென்ற உக்ரைன் நாட்டினை தனது நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ரஷியா பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது. 

ரஷியாவின் நாடு கைப்பற்றும் முயற்சிக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அதன் நட்பு நாடுகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இன்று உக்ரைனின் மீது ரஷியா படையெடுப்பை தொடங்கியுள்ளது. தன்னாட்டு பிரஜைகளை காப்பாற்ற உக்ரைன் நாட்டில் உள்ள மக்கள் ஆயுதங்கள் உபயோகம் செய்துகொள்ள அந்நாட்டு அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கி இருந்தது. 

உக்ரைன் எல்லையில் இருந்து 20 கி.மீ தொலைவில் ரஷிய படைகள் முகாமிட்டு இருந்த நிலையில், இன்று அதன் தாக்குதலை அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவின் கீழ் நிறைவேற்றி வருகிறது. இந்த நிலையில், உக்ரைனில் உள்ள சுமி பிராந்திய பகுதியில் தாக்குதல் நடத்தி, மாபெரும் குண்டு வெடிப்பு நிகழ்ந்த வீடியோ வெளியாகியுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ukraine #russia #Sumy Region #world
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story