இங்கிலாந்து நாட்டின் பிரதமரையும் விட்டுவைக்கதா கொரோனா வைரஸ்..! பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி.!
UK Prime minster boris johnson tests positive for coronavirus
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 21 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனவை கட்டுப்படுத்த அணைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. வல்லரசு நாடுகள், வளரும் நாடுகள், பின்தங்கிய நாடுகள், ஏழை, பணக்காரன் என எந்த பாகுபாடுமின்றி அனைவரையும் தாக்கி வருகிறது கொரோனா வைரஸ்.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தற்போது இங்கிலாந்து நாட்டின் பிரதமருக்கே கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.