×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எல்லாத்தையும் இழந்து விட்டேன்! இனி என்னிடம் ஒன்னும் மிஞ்சவில்லை... விமான விபத்தில் மனைவி, மகள் உயிரிழப்பு! இறுதியில் பிரிட்டன் நாட்டை விட்டே வெளியேற உத்தரவு......இந்திய வம்சாவளி இளைஞரின் பரிதாப நிலை!!!

ஏர் இந்தியா விமான விபத்தில் குடும்பத்தை இழந்த இந்திய வம்சாவளி நபருக்கு, பிரிட்டன் அரசு வெளியேற உத்தரவு. மனிதாபிமான கோரிக்கை நிராகரிப்பு.

Advertisement

ஏர் இந்தியா விமான விபத்தில் மனைவி, மகளை இழந்த இந்திய வம்சாவளி நபர், தற்போது பிரிட்டனை விட்டு வெளியேறுமாறு உத்தரவுக்குள் சிக்கியுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் தங்க அனுமதி கேட்டிருந்த அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 22க்குள் நாட்டை விட்டு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதால், அவரது எதிர்காலம் தெளிவின்றி உள்ளது.

விமான விபத்தில் குடும்ப இழப்பு

பிரிட்டனில் வசித்து வந்த முகமதுமியா சேத்வாலா, கடந்த ஜூன் 2025ல் நடந்த ஏர் இந்தியா விமான விபத்துவில் தனது மனைவி மற்றும் மகளை இழந்தார். அகமதாபாத் இருந்து லண்டன் சென்ற அந்த விமானம் விபத்துக்குள்ளானதில் மொத்தம் 241 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் அவரது வாழ்க்கையை முற்றிலும் மாற்றியமைத்தது.

விசா சிக்கல் மற்றும் அரசின் முடிவு

மனைவியின் விசா அடிப்படையில் பிரிட்டனில் தங்கி வந்த சேத்வாலாவுக்கு, அவரின் மறைவுக்குப் பிறகு சட்டப்பூர்வமாக அங்கு தங்க உரிமை இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் தாக்கல் செய்த UK immigration தொடர்பான மனிதாபிமான கோரிக்கை விண்ணப்பத்தை உள்துறை அமைச்சகம் நிராகரித்தது. அதன்பின், குறிப்பிட்ட தேதிக்குள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையும் படிங்க: இப்படி கூட நடக்குமா? எக்ஸ்ரேவில் உங்க மார்பில் உயிருடன் உள்ள கரப்பான் பூச்சி இருக்கு" என கூறிய மருத்துவர்! கடைசியில் சிங்கப்பூரில் நடந்த பெரிய டுவிஸ்ட்..!!

மன உளைச்சல் மத்தியில் எதிர்காலம் குழப்பம்

ஒரே விபத்தில் முழு குடும்பத்தையும் இழந்த வேதனையில் இருக்கும் சேத்வாலா, இந்தியா திரும்புவது தமக்கு சாத்தியமில்லை என கூறுகிறார். அங்கு நினைவுகள் வாட்டும் என்பதால், பிரிட்டனிலேயே புதிய வாழ்க்கையை தொடங்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் சட்ட விதிகள் காரணமாக அவர் வெளியேற வேண்டிய சூழல் உருவாகியுள்ளதால், ஒரு புறம் குடும்ப இழப்பு, மறுபுறம் நாட்டை விட்டு செல்ல வேண்டிய நிலை என கடினமான தருணத்தை அவர் எதிர்கொண்டு வருகிறார்.

 

இதையும் படிங்க: கணவர் போன் எடுக்காததால் உண்டான கோபம்! வீட்டில் எவ்வளவு தேடியும் விஷம் கிடைக்கல..... அடுத்து மனைவி 25 மாத்திரைகளை விழுங்கி....ஹோலி பண்டிகையில் நடந்த ரணகளம்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Air India crash #UK visa issue #இந்திய வம்சாவளி #immigration news #விமான விபத்து
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story