×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அந்த ஒரு பானம் குடித்த சில நொடிகளில் நடந்த அதிர்ச்சி! மருத்துவமனையில் படுத்த படுக்கையாக கிடக்கும் பெண்.! பெண்ணின் அம்மா வெளியிட்ட பகீர் வீடியோ...!!!

இங்கிலாந்தில் 18வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற இளம்பெண் மில்லி டாப்லின், மர்ம பானம் குடித்த சில நொடிகளில் உடல் செயலிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இங்கிலாந்தில் 18வது பிறந்தநாளைக் கொண்டாட சென்ற இளம்பெண் மில்லி டாப்லினுக்கு ஏற்பட்ட அனுபவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு விடுதியில் குடித்த பானத்துக்குப் பிறகு சில நொடிகளில் அவரது உடல் செயலிழந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் தற்போது சிகிச்சையில் உள்ளார்.

பானத்தில் கலந்த மர்மப் பொருள்

தகவலின்படி, அந்த இரவு விடுதியில் அறிமுகமில்லாத ஒருவர் “வோட்கா லெமனேட்” என்று கூறி ஒரு காக்டெய்ல் பானத்தை மில்லிக்கு வழங்கியுள்ளார். அதை குடித்த சில விநாடிகளிலேயே அவரது முகம் சளைக்க, விரல்கள் கட்டுப்பாடின்றி கோணிக்கொண்டதாக கூறப்படுகிறது. உடல் முழுவதும் விறைத்து, அசைய முடியாத நிலை உருவானது. பின்னர் அவர் மயக்கம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திடீரென விஜய் மீது தூக்கி போட்ட மர்ம பொருள்! அடுத்த நொடி சைக்கிளை பாதியில் விட்டுட்டு ஓடியதற்கு இதுதான் காரணமா..? பரபரப்பு வீடியோ!!!

மருத்துவர்களின் ஆரம்ப மதிப்பீடு

அதன்பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மில்லியை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடலில் மர்ம நச்சுப் பொருள் கலந்து இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தனர். ஒன்று உடலை முடக்கவும், மற்றொன்று மயக்க நிலையை ஏற்படுத்தவும் பயன்படும் வகையில் இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் அவை எந்த மருந்துகள் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

தாய் விடுத்த எச்சரிக்கை

இந்த நிலையில், மில்லியின் தாய் சமூக வலைதளங்களில் வீடியோவை பகிர்ந்து மற்ற பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். “அறிமுகமில்லாதவர்கள் தரும் எந்தப் பானத்தையும் வாங்கி குடிக்க வேண்டாம்” என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த drink spiking சம்பவம், பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்து மீண்டும் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை நினைவூட்டுகிறது.

இதையும் படிங்க: இதுதான் சரியான நேரம்! இன்னைக்கு நான் தான் சப்பாத்தி செய்றேன்.... காதலனின் பேச்சை கேட்டு பெற்றோருக்கு மகள் செய்த கொடூரம்! பகீர் கிளப்பும் ஆடியோ ஆதாரங்கள்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#UK nightclub case #drink spiking #மில்லி டாப்லின் #Women safety #toxic cocktail
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story