தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணம் முடிந்து 2 வாரங்களுக்கு பிறகே மனைவி ஒரு ஆண் என தெரியவந்த சம்பவம்..! அதிர்ந்துபோன கணவன்..!

Uganda Imam mocked for mistakenly marrying a man

uganda-imam-mocked-for-mistakenly-marrying-a-man Advertisement

உகாண்டா நாட்டில் திருமணம் முடிந்து இரண்டு வாரங்கள் ஆன பிறகு தனது மனைவி பெண் அல்ல, அவர் ஒரு ஆண் என்பது கணவருக்கு தெரியவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உகாண்டாவில் உள்ள காயுங்கா என்னும் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது முதும்பா. இஸ்லாமிய மத போதகரான இவர் தினமும் மசூதிக்கு சென்று வரும் நேரங்களில் ஸ்வபுல்லா நபுகீரா என்பவரை சந்தித்துள்ளார். இவர்கள் சந்திப்பு நாளடைவில் காதலாக மாற, இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்லாமிய முறைப்படி இருவரும் திருமணம் செய்துள்ளன்னர்.

இந்நிலையில் முகமதுவின் மனைவி அக்கம் பக்கத்து வீடுகளில் இருக்கும் டிவி, துணிகள் போன்றவற்றை திருடிக்கொண்டு சுவர் ஏறிக்குதித்து ஓடுவதாக அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனனர். இதனை அடுத்து ஸ்வபுல்லா நபுகீராவை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துசென்றுள்ளன்னர்.

Mystery

அவர் முஸ்லீம் பெண்கள் அணியும் ஹிஜாப் அணிந்திருந்தார். அதன் பிறகு அந்நாட்டுச் சட்டப்படி, பெண் காவலர் ஒருவர் ஆடையைக் களைந்து சோதனை செய்துள்ளனர். அப்போது துணிகளை சுருட்டி மார்பு பகுதியில் மார்பகம் போலவும், கீழ் பகுதியில் ஆடையைக் களைந்து சோதனை செய்யும் போது அவருக்கு ஆண் உறுப்பு இருப்பது தெரியவந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

இதனை அடுத்து நடந்த விசாரணையில் நபுகீரா என்ற பெண்ணாக நடித்தவரது பெயர் ரிச்சர்ட் துமுஷாபே என்று தெரியவந்துள்ளது. பணத்துக்காக பெண் வேடமிட்டதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி முகமதுவிடம் கேட்டபோது, எங்கள் திருமணம் முடிந்த நாளில் இருந்து அவருக்கு மாதவிடாய் என்று கூறியதால் நாங்கள் உறவில் ஈடுபடவில்லை என்றும் நான் காத்துக்கொண்டிருந்தேன் என்று விளக்கமளித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mystery #myths #Crime
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story