×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தந்தையின் மறதியால், துடிதுடிக்க இரட்டை குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்!! கதறி துடித்த தாய்!!

twin baby dead inside car

Advertisement

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ராக் லேண்ட் நகரில் வசித்து வருபவர் ஜுவான் ரோட்ரிக்ஸ். இவரது மனைவி மரிசா. இவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண்குழந்தையும் , ஒரு வயதில் லூனா மற்றும் போனெக்ஸ் என்ற இரட்டைக் குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் ஜுவான்  மற்றும் மரிசா இருவரும் பணிபுரிந்து வந்ததால் அவர்கள்  குழந்தைகளை பாதுகாப்பு மையத்தில் விட்டுச் செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர்.

இந்நிலையில் குழந்தைகளை பாதுகாப்பு மையத்திற்கு அழைத்து சென்ற ஜுவான் தனது 4 வயது மகனை மட்டும் அங்கு விட்டுவிட்டு சென்றுள்ளார். மேலும் காரின் பின்புறம் இருந்த குழந்தைகளை  அவர் மறந்துள்ளார். இந்நிலையில் மறதியில் அவர்களை காரிலேயே விட்டு சென்ற ஜுவான் பணி முடிந்த பின்பு காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்பொழுது பாதி வழியில் எதார்த்தமாக காரின் பின் இருக்கையில் இரட்டைக் குழந்தைகள் வாயில் நுரை தள்ளி அசைவற்று கிடந்ததைக் கண்டுள்ளார். அதனால் அதிர்ச்சியடைந்த அவர் குழந்தைகளை மருத்துவமனையில் பரிசோதனை செய்து பார்த்ததில் அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் குழந்தைகள் எட்டு மணி நேரம் காரில் இருந்ததால், அதன் வெப்பம் தாங்காமல் உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். இதனையறிந்த  ஜுவான் குழந்தைகளை கொன்றுவிட்டேனே என்று கதறி அழுதுள்ளார்.

பின்பு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட நிலையில் 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிறையிலிருந்து வெளியில் வந்த ஜுவானை அவரின் மனைவி மரிசா கண்ணீருடன் கட்டித்தழுவி அழுதுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், குழந்தைகளை மிகவும் பாசமாக பார்த்துக்கொள்வார். ஒருநாளும் குழந்தைகளை கொடுமைப்படுத்தும் விதமாக நடந்து கொண்டது கிடையாது என கதறியுள்ளார்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#twin baby #dead #car
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story