×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரோனா நோயாளிகளை அடையாளம் காண்பதற்கு மோப்ப நாய்களுக்கு பயிற்சி!

Training dog for corona identification

Advertisement

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸால் பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்திலும் கொரோனாவால் உயிரிழப்பு நாளுக்கு நாள் பலமடங்கு அதிகரித்துக் கொண்டே போகிறது.

இந்தநிலையில், இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களை மோப்ப நாய்கள் மூலம் உடனடியாக கண்டுபிடிக்க பயிற்சி அளிக்கும் முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த முயற்சியை, ஏற்கனவே மோப்ப நாய்கள் மூலம் மலேரியா தாக்கியவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்ற இங்கிலாந்தின் ‘மெடிக்கல் டிடெக்சன் டாக்ஸ் சாரிட்டி‘ என்ற தொண்டு நிறுவனம் இதற்கு முன்வந்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் கூறுகையில், இந்த நாய்கள் கொரோனா அறிகுறி உள்ளவர்களையும், இல்லாதவர்களையும் உடனடியாக தனது மோப்ப சக்தியால் அடையாளம் கண்டுவிடும் என தெரிவித்துள்ளனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona #virus
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story