×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சுனாமி: இந்தோனேசியாவில் 43 பேர் பலி, 600 பேர் படுகாயம் பலரது நிலை..?

today indonasia sunmi 43death, 600 injury

Advertisement

இந்தோனேசியாவில் இன்று எரிமலை வெடித்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 43 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 600 பேர் காயமடைந்திருப்பதாகவும் மேலும் பலரை தேடும் பணியில் உள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை இந்தோனேசியாவின் சண்டா ஸ்டெரெய்ட் பகுதியில் உள்ள எரிமலை திடீரென வெடித்தது. எரிமலை வெடித்து தீக்குழம்புகள் வெளிவந்ததை தொடர்ந்து சுனாமி ஏற்பட்டது. சுமத்ரா தீவு, ஜாவா கடற்கரைக்கு இடையே ஏற்பட்ட பயங்கரமான சுனாமியால் கடற்கரைக்கு அருகே உள்ள பகுதிகளைச் சோ்ந்த 43 போ் பலியாகி உள்ளனர் என்று அந்நாட்டு பேரிடா் மீட்பு படையினா் தொிவித்துள்ளனா். 

மேலும் 600 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பலரது நிலை என்னவென்று தெரியாத நிலையில் அவர்களை தேடும் பணி தீவீரமாக முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

2004 டிசம்பர் 26 அன்று இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்தின் கடற்கரையோரங்களில் ஏற்பட்ட சுனாமி பயங்கரமான பேரழிவை கொடுத்தது. இன்றும் அனைவரின் மனதை விட்டு நீங்காத நிலையில் இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில் தற்போது இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளார்கள்.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tsunami #indonesia #indonasi sunami2018
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story