அதிர்ச்சி! மூன்று கண்ணுடைய அதிசய பாம்பு! ! வைரலாகும் புகைப்படம்!
Three Eye snake found in Australia high way

இந்த உலகில் பலகோடி கணக்கான உயிரினங்கள் வாழ்ந்துவருகிறது. நமது கண்ணுக்கும், அறிவுக்கும் எட்டாத உயிரினங்களும் இந்த உலகில் வாழத்தான் செய்கிறது. அந்த வகையில் ஆஸ்திரேலிய நாட்டில் வடக்கு பகுதியில் நெடுஞ்சாலை ஒன்றில் மூன்று கண்களையுடைய அதிசய பாம்பின் புகைப்படம் ஓன்று வெளியாகி வைரலாகிவருகிறது.
மூன்று கண்களையுடைய அந்த அதிசய பாம்பின் புகைப்படத்தை ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள வனவிலங்கு காப்பகம் ஓன்று பகிர்ந்துள்ளது. இந்த அதிசய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
இந்த பாம்பு கார்பெட் பைதான் வகையை சேர்ந்தது என்றும், நீண்ட காலமாக உயிர்வாழ்ந்துவந்த இந்த பாம்பு தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இயற்கையாகவே தானாக ஏற்பட்ட மரபணு மாற்றத்தால் இதுபோன்று மூன்று கண்கள் தோன்றியிருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் வழக்கத்துக்கு மாறாக இருந்த மூன்றாவது கண்ணும் நன்றாக இயக்கியதாக கூறப்படுகிறது. இதில் சோகமான விஷயம் என்னவென்றால் நெடுஞ்சாலையில் பிடிபட்ட இந்த பாம்பு தற்போது உயிருடன் இல்லை என்பது வருத்தமான செய்தி.