×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

111 வருடங்கள்... மனித உயிர்களை கேட்கும் டைட்டானிக் கப்பல்.! டைட்டன் நீர் மூழ்கி கப்பல் வெடித்து சிதறி 5 பேர் பரிதாப பலி.!

111 வருடங்கள்... மனித உயிர்களை கேட்கும் டைட்டானிக் கப்பல்.! டைட்டன் நீர் மூழ்கி கப்பல் வெடித்து சிதறி 5 பேர் பரிதாப பலி.!

Advertisement

1912 ஆம் ஆண்டு விபத்திற்குள்ளான டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக சென்ற மூன்று கோடிஸ்வரர்கள் உட்பட ஐந்து பேர் விபத்தில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

1912 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் செளத்தாம்ப்டன் நகரில் இருந்து  அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு  புறப்பட்ட டைட்டானிக் கப்பல்  ஏப்ரல் 14ஆம் தேதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் 1500 பேர் உயிரிழந்தனர். கப்பல் விபத்து வரலாற்றிலேயே இதுதான் மிகப்பெரிய விபத்தாக பார்க்கப்படுகிறது. இந்த விபத்து நடந்து 111 வருடங்கள் ஆகியும்  இந்தக் கப்பலை பற்றி  ஆய்வாளர்களும் திரைப்படத்துறையினரும் ஆய்வு செய்து வருகின்றனர்.

அமெரிக்காவின் நியூஃபௌண்ட்லாண்ட்  தீவிலிருந்து 740 கிலோமீட்டர் தொலைவில் இந்த கப்பல் கடலுக்கு அடியில் இருக்கிறது. இந்தக் கப்பலை சுற்றுலா பயணிகளும் பார்வையிடுவதற்காக அமெரிக்காவைச் சார்ந்த ஓஷன் கேட் என்ற நிறுவனம்  டைட்டன் என்று பெயரிடப்பட்ட நீர் மூழ்கி கப்பலை உருவாக்கி  அதன் மூலம் மூன்று சுற்றுலா பகுதிகளை அழைத்துச் செல்ல திட்டமிட்டு இருந்தது. இந்தத் திட்டத்தின் படி  மூன்று சுற்றுலா பயணிகள் உட்பட ஐந்து பேர் கடந்த 13ஆம் தேதி நீர்மூழ்கி கப்பலில் புறப்பட்டு சென்றனர்.

பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த தொழிலதிபர் அவரது மகன் மற்றும் இன்னொரு சுற்றுலா பயணி மாலுமிகள் என ஐந்து பேர் கொண்ட குழு  டைட்டானிக் கப்பலை கடலுக்கு அடியில் சென்று பார்ப்பதற்காக டைட்டன் நீர் மூழ்கி கப்பலில் சென்றது . இந்தக் கப்பல் புறப்பட்ட 2 மணி நேரத்திலேயே நீர்மூழ்கி கப்பலோடான தொடர்பு துண்டிக்கப்பட்டதால் இதனைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து சிதறி விட்டதாகவும்  அதில் பயணம் செய்த ஐந்து பேரும் உயிரிழந்ததாகவும்  வீட்டுக்குழு அறிவித்திருக்கிறது. டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்கள் கிடைக்கின்ற இடத்தில்  இந்த நீர்மூழ்கி கப்பலில் ஐந்து பாகங்கள் சிதறி கிடப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இறந்தவர்களின் உடல்  மீட்கப்படுமா என்பது தெரியவில்லை என அமெரிக்கா கடலோரப் படை தெரிவித்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#world #America #titansubmersible #exploded #fivedead
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story