×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

டால்ஃபினை பார்த்து ஆற்றல் குதித்த சிறுமி... சுறா கடித்து குதறிய கொடூரம்...

டால்ஃபினை பார்த்து ஆற்றல் குதித்த சிறுமி... சுறா கடித்து குதறிய கொடூரம்...

Advertisement

16 வயது சிறுமியை எதிர்பாராத விதமாக சுறா ஒன்று கடித்து தண்ணீருக்குள் இழுந்து சென்றது.

ஆஸ்திரேலியாவின் மேற்கு ஆஸ்திரேலியா மாகாணத்தின் தலைநகர் பெர்த்தில் ஓடும் ஸ்வான் ஆற்றில்  டால்பின்கள் அதிக அளவில் உள்ளன. 

மேலும் இந்த ஆற்றில் ஜெட் ஸ்கை என்று அழைக்கப்படும் நீரில் செல்லக்கூடிய மோட்டார் சைக்கிள் சவாரி மிகவும் பிரபலமாகும். இந்நிலையில் நேற்று முன்தினம் பெர்த் நகரை சேர்ந்த 16 வயது சிறுமி தனது நண்பர்களுடன் ஜெட் ஸ்கை சவாரியில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது ஆற்றில் கூட்டமாக டால்பின்கள் வந்ததை பார்த்தவுடன் உற்சாகத்தில் அந்த சிறுமி ஆற்றுக்குள் குதித்து டால்பின்களுக்கு அருகில் சென்று நீந்தியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுமியை சுறா ஒன்று கடித்து தண்ணீருக்குள் இழுந்து சென்றது. 

இதை பார்த்து அதிர்ந்த சிறுமியின் நண்பர்கள் சுறாவிடம் இருந்து சிறுமியை மீட்க போராடினர். ஆனால் சுறா விடாமல் சிறுமியை கடித்துக்குதறியது. இறுதியாக சுறா சிறுமியை விட்டுவிட்டு தண்ணீருக்குள் சென்றது. 

அதன் பிறகு சிறுமியை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#world #australia #The Girl Being Bitten by Shark #girl died
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story