அது என்னத்த கண்டுச்சு... வீட்டுக்குள் புகுந்த 6 அடி பாம்பு.! முட்டைன்னு நினைச்சு 3 கோல்ஃப் பந்துகளை விழுங்கிட்டு..! நகர முடியாமல் அப்படியே கிடந்த பாம்பு... இறுதியில் குடும்பத்தினர் செய்த அந்த காரியம்! வைரல் வீடியோ...!!!
அமெரிக்காவின் டெக்சாஸ் வீட்டுக்குள் புகுந்த 6 அடி பாம்பு, முட்டைகள் என நினைத்து மூன்று கோல்ஃப் பந்துகளை விழுங்கியது. மருத்துவர்கள் அவற்றை பாதுகாப்பாக அகற்றினர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள பாம்பு, அங்கிருந்த மூன்று கோல்ஃப் பந்துகளை முட்டைகள் என தவறாக நினைத்து விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பந்துகளை விழுங்கியதால் நகர முடியாமல் கிடந்த பாம்பை குடும்பத்தினர் மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
முட்டைகள் என நினைத்து கோல்ஃப் பந்துகளை விழுங்கிய பாம்பு
இரவு நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த பாம்பு, அங்கு கிடந்த கோல்ஃப் பந்துகளை பார்த்துள்ளது. அவை முட்டைகள் என நினைத்த பாம்பு, ஒன்றன்பின் ஒன்றாக மூன்று பந்துகளையும் விழுங்கியுள்ளது. அதன் பின்னர் நகர முடியாமல் ஒரே இடத்தில் கிடந்ததை குடும்பத்தினர் கவனித்தனர்.
இதையும் படிங்க: 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு நடக்கும் அதிசயம்..! ஒரே நேரத்தில் உருவான 5 புயல்கள்... அதில் 3 அதிதீவிர நிலையை எட்டியது! கோரத்தாண்டவமாடும் இயற்கை!!!
மருத்துவர்கள் அகற்றிய மூன்று பந்துகள்
பாம்பின் நிலையை பார்த்த குடும்பத்தினர் உடனடியாக அதனை மீட்டு அருகிலிருந்த கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து மருத்துவர்கள் மயக்க மருந்து செலுத்தி, பாம்பின் வயிற்றில் சிக்கியிருந்த கோல்ஃப் பந்துகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சிறப்பு கவனத்துடன் செயல்பட்டு, மூன்று பந்துகளையும் ஒவ்வொன்றாக மெதுவாக வெளியே எடுத்தனர்.
உடல்நிலை சீரானதும் வனப்பகுதிக்கு அனுப்பிவைப்பு
இந்த நிகழ்வு மருத்துவமனை ஊழியர்களுக்கும் மறக்க முடியாத அனுபவமாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு பாம்பின் உடல்நிலை சீரானது. இதையடுத்து வனவிலங்கு மீட்புப் படையினர் அதனை பாதுகாப்பாக அழைத்துச் சென்று காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: அடி ஆத்தி...! வானத்திலிருந்து பொத்து பொத்துன்னு விழுந்த பாம்புகள்! புயல் காற்றில் மழையோடு வந்த விசித்திர ஆபத்து... நடுங்க வைக்கும் காட்சி!!!