SeeEx நேரலையிலையே இப்படியா? இரவில் பிரபல ஸ்டீரீமர் டிரைகோ பெண்ணை அடித்து, பால் பாட்டிலால் தாக்கிய கொடூரம்! தீயாய் பரவும் வீடியோ..!!!
டெக்சாஸ் SeeEx நேரலை நிகழ்வில் ஸ்ட்ரீமர் டிராகோவும் மியாமேக்சுடுவும் மோதிக்கொண்ட வீடியோ வைரலாகி, இணையத்தில் மாறுபட்ட விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
டெக்சாஸில் நடைபெற்ற ‘SeeEx’ நேரலை நிகழ்வின்போது பிரபல ஸ்ட்ரீமர் டிராகோவுக்கும் மியாமேக்சுடு என்ற பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் இருவருக்கும் இடையே உடல் ரீதியான மோதல் ஏற்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சம்பவத்துக்கான முழுமையான பின்னணி இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
வைரலான வீடியோவில் பதிவான மோதல்
இரவு நேரத்தில் திறந்தவெளிப் பகுதியில் இந்த மோதல் நடந்ததாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவில், டிராகோ அந்தப் பெண்ணைத் தாக்குவதும், பால் பாட்டிலை வீசுவதும், பின்னர் அவரை தரையில் பிடித்து கட்டுப்படுத்த முயல்வதும் பதிவாகியுள்ளது. அருகில் இருந்த சிலர் தங்களது செல்போன்களில் காட்சிகளை பதிவு செய்துள்ளனர்.
மோதலுக்கு முன்பு என்ன நடந்தது?
வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, டிராகோ மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சில இணையவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர். அதே நேரத்தில், மோதல் தொடங்குவதற்கு முன்பாக மியாமேக்சுடு அவருடன் தகராறில் ஈடுபட்டதாகவும், தற்காப்புக்காகவே அவர் செயல்பட்டதாகவும் மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
எனினும், மோதலுக்கு முன்பு நடந்ததாக கூறப்படும் நிகழ்வுகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை. எனவே, சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள காட்சிகளை மட்டும் அடிப்படையாக வைத்து முழு சம்பவத்தின் பின்னணியை உறுதி செய்ய முடியாத நிலை உள்ளது.
ஸ்ட்ரீமர்களின் பின்னணியால் அதிகரித்த பரபரப்பு
இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களின் பின்னணியும் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. டிராகோ, பிரபல ‘Kick’ ஸ்ட்ரீமரான கிளவிக்குலரின் (Clavicular), இயற்பெயர் பிரேடன் பீட்டர்ஸ், நெருங்கிய நண்பர் என கூறப்படுகிறது. மியாமேக்சுடு, கிளவிக்குலரின் முன்னாள் காதலி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐஸ் போஸைடன் மற்றும் நிக் லீ ஆகியோர் நடத்தும் பல நாள் ‘SeeEx’ நிகழ்வில் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் தொடர்பான செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது டிராகோ-மியாமேக்சுடு மோதல் வீடியோவும் வைரலாகியுள்ளது. இந்த வைரல் வீடியோ தொடர்பாக இணையவாசிகள் மாறுபட்ட கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: எங்கிருந்துடா வந்திங்க... திடீரென சுற்றுலாப் பயணியை கெட்டியாக பிடித்துக்கொண்ட வௌவால்! அதிர்ச்சியில் உறைந்த நபர்.... வைரல் வீடியோ!!!