அதிர்ச்சி காட்சி.... லிப்டில் நுழைய முயன்ற மருத்துவரின் தலை துண்டானது! லிஃப்ட்டுக்குள் அலறிய செவிலியர்.... உறைந்து போன அந்த 15 நிமிடம்! திக் திக் வீடியோ..!!!
அமெரிக்கா டெக்சாஸில் மருத்துவமனையில் ஏற்பட்ட லிஃப்ட் கோளாறில் அறுவை சிகிச்சை நிபுணர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட லிஃப்ட் கோளாறு, ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் உயிரைப் பலிகொண்டது. 2003-ஆம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவம், மருத்துவ துறையையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சம்பவ நேரத்தில் அவர் பணிக்கு வந்திருந்ததாக கூறப்படுகிறது.
லிஃப்ட் கதவிலேயே சிக்கிய மருத்துவர்
35 வயதான டாக்டர் ஹிட்டோஷி நிகைடோ, செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். தகவலின்படி, அவர் லிஃப்ட்டிற்குள் நுழைய முயன்றபோது, கதவுகள் திடீரென அவரது தோள்பட்டைகளை இறுக்கமாக பிடித்தன. இதனால் அவர் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கினார்.
தொழில்நுட்ப கோளாறால் நிகழ்ந்த பேரழிவு
இதையடுத்து, லிஃப்ட் திடீரென மேல்நோக்கி நகரத் தொடங்கியது. இதில் ஏற்பட்ட கடுமையான அழுத்தத்தால், மருத்துவர் மிகக் கொடூரமாக காயமடைந்து, உடனடியாக உயிரிழந்தார். இந்த லிஃப்ட் விபத்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நம்பவே முடியல... மேடையில் பேசிக்கொண்டிருந்த 24 வயது இளம் பெண்! திடீரென சரிந்து விழுந்து மயங்கி.... அதிர்ச்சிகரமான சிசிடிவி காட்சி..!!
உள்ளே சிக்கிய செவிலியர் – அதிர்ச்சி தருணம்
அந்த நேரத்தில் லிஃப்ட்டிற்குள் இருந்த செவிலியர் ஒருவர், சுமார் 15 நிமிடங்கள் வெளியே வர முடியாமல் சிக்கியிருந்தார். மிகுந்த பதட்டத்தில் அந்த நேரத்தை அவர் எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த மருத்துவமனை விபத்து, அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கும் பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: சிறுமியின் அதீத துணிச்சல்.... 2 பிஞ்சு குழந்தைகளை நசுக்க வந்த லிப்ட் கதவு.... அடுத்த நொடி சிறுமி செய்த அதிரடி செயலை பாருங்க!!!