தினமும் இதே தொல்லை. தூக்கம் போச்சு...நிம்மதி போச்சு! அதிகாலை 5 மணிக்கே எந்துருச்சு வாசலை கழுவி கோலம் போடும் இந்தியர்கள்! செம கடுப்பில் அமெரிக்கர்கள்!!!
டெக்சாஸ் ஃபிரிஸ்கோவில் இந்தியக் குடும்பம் அதிகாலை செயல்கள் குறித்து அமெரிக்கர் புகார்; சமூக வலைதளத்தில் விவாதம் தீவிரம்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஃபிரிஸ்கோ பகுதியில், ஒரு சாதாரண பக்கத்து வீட்டுக் குறை கூறல் தற்போது சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. இந்தியக் குடும்பத்தின் அதிகாலை நடைமுறைகள் குறித்து ஒரு அமெரிக்கர் பதிவு செய்த குறிப்பு, பல்வேறு கருத்துகளை கிளப்பியுள்ளது. இதனால், கலாச்சாரம் மற்றும் சட்டம் குறித்த விவாதம் மீண்டும் முன்வந்துள்ளது.
அதிகாலை நடவடிக்கைகள் குறித்த புகார்
ஃபிரிஸ்கோவில் வசிக்கும் அந்த நபர், இரவு நேரத்தில் ஆஸ்திரேலிய நிறுவனத்தில் பணிபுரிந்து அதிகாலை 3 மணிக்கு மட்டுமே தூங்கச் செல்கிறார். ஆனால், சரியாக காலை 5 மணிக்கே பக்கத்து வீட்டில் வசிக்கும் இந்தியக் குடும்பம் எழுந்து வாசலை சுத்தம் செய்தல், தண்ணீர் தெளித்தல் மற்றும் கோலம் போடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாக அவர் கூறியுள்ளார். இதனால் தனது தூக்கம் பாதிக்கப்படுவதாக அவர் பதிவு செய்துள்ளார்.
‘இது எங்கள் கலாச்சாரம்’ – குடும்பத்தின் பதில்
இந்த விவகாரம் குறித்து நேரடியாக கேட்டபோது, அந்த இந்தியக் குடும்பம், “இது எங்கள் தினசரி பழக்கம், எங்கள் கலாச்சாரம்” என அமைதியாக பதிலளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியர்களின் வழக்கமான அதிகாலை பழக்கங்களில் ஒன்றான கோலம் போடும் நடைமுறை அங்கு விவாதத்திற்கு காரணமாகியுள்ளது.
இதையும் படிங்க: மும்பை மெட்ரோ ரயிலுக்குள் விதிமுறைகளை மீறி நபர் செய்த அதிர்ச்சி செயல்! அனைவரையும் அதிரவைத்த வீடியோ காட்சி...
சட்டம் vs கலாச்சாரம் – சமூக வலைதளத்தில் விவாதம்
இந்த பதிவு சமூக வலைதளமான Reddit-இல் வெளியானதும், பலரும் கருத்து தெரிவித்தனர். அமெரிக்காவின் Noise Ordinance விதிகளின்படி அதிகாலை நேரங்களில் சத்தம் ஏற்படுத்துவது தவறு என சிலர் அந்த அமெரிக்கருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், இது இந்தியர்களை குறிவைத்து பரப்பப்படும் இனவாத கருத்து என மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சிறிய அளவில் தொடங்கிய இந்த விவகாரம், தற்போது அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறைகள் குறித்து பெரிய அளவில் பேசப்படும் விவாதமாக மாறியுள்ளது.