×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உஷார்! டெங்கு காய்ச்சல் பரவுவது கொசுக்களால் மட்டுமல்ல.! வெளியான புதிய அதிர்ச்சித் தகவல்!!

tengu fever spread by mosquitoes

Advertisement

பல நாடுகளிலும் டெங்கு காய்ச்சல் பரவி பெரும் உயிர்ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் டெங்கு காய்ச்சல் கொசுக்கள் மூலம் இல்லாமல், டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் பாலியல் ரீதியான உறவு வைத்திருந்தாலும்  பரவும் என ஸ்பெயின் நாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதாவது மக்கள் பலரும் டெங்குகாய்ச்சல் கொசு கடிப்பதால்தான் உருவாகிறது என நம்பி வருகின்றனர். மேலும் இந்த காய்ச்சல் பரவுவதால் நோயாளியின் உடல் மோசமாக பாதிக்கப்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதனால் டெங்கு காய்ச்சலை எண்ணி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ள இந்த நிலையில் தற்போது அதிர்ச்சிகரமான புதிய தகவல் வெளிவந்துள்ளது.

ஸ்பெயினில் மேட்ரிட் பகுதியை சேர்ந்த 41 வயது நபர் சமீபத்தில் காய்ச்சலால் பாதிக்கப் பட்டிருந்தார். இந்நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இந்நிலையில் அவர் வசித்த பகுதியில் ஆய்வு செய்துள்ளனர். ஆனால் அங்கு டெங்கு வருவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. மேலும் அவர் எங்கும் பயணம் செய்யவில்லை. இந்நிலையில் அவருக்கு எப்படி டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என மருத்துவர்கள் குழப்பத்தில் இருந்தனர். 

இந்த நிலையில் அவர் தன்னுடன் தங்கியிருந்த ஆண் நபர் ஒருவருடன் பாலியல் உறவு கொண்டதாக கூறியுள்ளார். மேலும் அவர் அந்த நபர் பல இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவர். இந்நிலையில் அதன் மூலம் டெங்கு பரவி இருக்கலாம் என சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் அந்த ஆண் நண்பரின் விந்து மாதிரியை பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு வைரஸ் இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து டெங்கு வைரஸ் பாதிக்கப்பட்ட ஆண்-பெண் எவராக இருந்தாலும் அவர்களுடன் உடலுறவு கொண்டால் அவர்களுக்கும் டெங்கு பரவலாம் என ஸ்பெயின் சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#spain #tengu virus #mosquito
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story