பாட்னா மரைன் டிரைவில் இளையர்களுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய தேஜஸ்வி யாதவ்! வீடியோ செம வைரல்...
பாட்னா மரைன் டிரைவில் இளைஞர்களுடன் கலந்துகொண்டு நடனமாடிய தேஜஸ்வி யாதவ் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பீகார் அரசியலில் எப்போதும் தீவிரமான பேச்சுகளுடன் தோன்றும் தேஜஸ்வி யாதவ், இம்முறை தனது சாதாரண முகத்தை விட வேறுபட்ட ஒரு பக்கம் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தியுள்ளார். இது இளைஞர்களிடம் பெரும் ஆர்வத்தை கிளப்பியுள்ளது.
மரைன் டிரைவில் தேஜஸ்வியின் நடனம்
பாட்னாவின் மரைன் டிரைவில் இளைஞர்களுடன் கலந்துகொண்டு மகிழ்ச்சியாக உரையாடிய தேஜஸ்வி, ரசிகர்களின் கோரிக்கைக்கு இணங்க சினிமா பாணியில் நடனமாடியுள்ளார். ஹிருத்திக் ரோஷனைப் போல் ஸ்டைலாக ஆடிய அவர், இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். வீடியோவில் அவர் சிரித்தபடி, நகைச்சுவையாக பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
சகோதரி ரோகிணி பகிர்ந்த வீடியோக்கள்
இந்த வீடியோவை அவரது சகோதரி ரோகிணி ஆச்சார்யா தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். மேலும், மூன்று வேறுபட்ட காட்சிகளையும் பகிர்ந்துள்ளார். அதில், தேஜஸ்வி இளைஞர்களுடன் சிரித்தபடி உரையாடுவது, ரசிகர்களுடன் கலந்துரையாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ரோகிணி குறிப்பாக, “மிகவும் விலைமதிப்பற்ற விஷயம், முகத்தில் ஒரு இனிய புன்னகை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வேற லெவல்.... தவெக மாநாட்டில் விஜய் தொண்டர்கள் செய்த தரமான சம்பவம்! வீடியோவை வெளியிட்ட விஜய்! இணையத்தில் தீயாய் வைரலாகும் வீடியோ....
மோடி குறித்து நகைச்சுவை
சமூக ஊடகங்களில் வைரலாகிய இன்னொரு தருணம் தேஜஸ்வியின் நகைச்சுவை. “நான் மோடி ஜியையும் கூட நடனமாட வைக்கிறேன்” என்று அவர் கூறிய கருத்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனை பல நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.
இணையத்தில் ரசிகர்கள் பாராட்டு
வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “தேஜஸ்வியின் லேசான பாணி மக்களை நெருக்கமாக ஈர்க்கிறது” என்று பாராட்டியுள்ளனர். சிலர், “அவரது அரசியல் புரிதலுடன், இளைஞர்களிடையே செல்வாக்கு அதிகரித்து வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
அரசியலில் தீவிரமான முகம் காட்டியவராக இருந்தாலும், இம்முறை தேஜஸ்வியின் எளிமையான பக்கம் வெளிப்பட்டுள்ளது. இதனால் அவர் இளைஞர்களிடம் நெருக்கமாக இணையத்தில் பிரபலமாகி வருகிறார்.
இதையும் படிங்க: லெஜெண்ட்ஸ்! வெள்ளத்தில் முழங்கால் அளவு தண்ணீருக்குள் ஜாலியாக இரு ஆண்கள் என்ன பன்றாங்கன்னு நீங்களே பாருங்க! வைரல் வீடியோ....