மாணவர்கள் முன் தன் முழு உடல் உறுப்புகளையும் காட்டி பாடம் எடுத்த ஆசிரியை! இப்படியும் ஒரு ஆசிரியையா..? வைரல் வீடியோ!
Teacher takes class in different method video goes viral

சில ஆசிரியர்கள் பாடப்புத்தகத்தில் இருப்பதை அப்படியே மனப்பாடம் செய்து மாணவர்களிடம் ஒப்பிப்பது, மாணவர்களுக்கு புரியுதா இல்லையா என்று கூட இல்லாமல், கடமைக்கு சொல்லி தருவது என இருக்க, சிலரோ அதில் இருந்து மாறுபட்டு வித்யாசமான முறையை கடைபிடித்து பாடம் நடத்துவார்கள்.
அந்த வகையில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஆசிரியை ஒருவர் தனது உடல் உறுப்புக்கள் முழுவதும் வெளியே தெரியும்படி உடை அணிந்துவந்து மாணவர்களுக்கு பாடம் எடுத்து அசத்தியுள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
இந்த ஆசிரியை தன் மாணவர்களுக்கு உடற்கூறியல் குறித்து பாடம் எடுத்துள்ளார். உடல் உறுப்புகள் வெளியே தெரிந்தால் மாணவர்களுக்கு எளிதில் புரியும் என்பதற்காக இவ்வாறு செய்துள்ளார் அந்த ஆசிரியை. இந்த வீடியோவை அவரது கணவர் தன் முகநூல் பக்கத்தில்போட அது இப்போது வைரலாகி வருகிறது.