×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரித்தானியாவில் ஒரு கப் டீ யின் விலை ரூபாய் 35,100 ரூபாயா?- அப்படி என்ன ஸ்பெஷலாக இருக்கிறது அந்த டீயில் தெரியுமா?

tea special

Advertisement

பெரும்பாலானோர் காலையில் டீ அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதிலும் சிலருக்கு காலை எழுந்ததும் டீ அருந்தவில்லை என்றால் அன்றைய நாள் அவர்களுக்கு நல்ல நாளாக அமையாமல் கூட போய்விடும், அந்த அளவுக்கு டீயின் மீது பைத்தியமானவர்களும் உள்ளனர்.

மேலும் அலுவலங்களில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது தலைவலி ஏற்பட்டால் டீயைதான் பலரும் நாடுகின்றனர். நாள் ஒன்றுக்கு சுமார் 10 கப் வரை டி அருந்தும்  டீ பிரியர்களுக்கு இங்கு பஞ்சமில்லை.

அதேபோல  லண்டனில் உள்ள பாக்கிங்காம் அரண்மனைக்கு எதிரே உள்ளதுதான் ரூபென்ஸ் உணவகத்தில் ஒரு கப் டீ 200 டாலருக்கு(இலங்கை மதிப்பில் ரூ.35 ஆயிரத்து 100) விற்பனை செய்யப்படுகிறது.

”ராயல் ஆப்டர்நூன் டீ மெனு” என பெயரிடப்பட்டுள்ள இந்த தேநீரின் ஸ்பெஷல்  என்னவென்றால், நாம் எந்த சுவை தேநீர் வேண்டுமென்று தேர்ந்தெடுக்கிறோமோ, அதன் பின்னரே தேயிலை எடுக்கப்பட்டு, துல்லியமாக எடை போடப்பட்டு பின்னர் அதை சுத்தமான நீரில் காய்ச்சி வடிகட்டப்பட்டு அதன் பின் வெள்ளிக்கோப்பையில் வைத்து  பரிமாறப்படுகிறது.

இதன் தனிச்சுவை உள்ளூர் வாசிகள் மட்டும் இன்றி, சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.விலை உயர்வாக இருந்தபோதும் வாடிக்கையாளர்கள், இந்த டீயை ஒரு முறை சுவைத்துவிட்டால், அந்த சுவை நாக்கில் ஒட்டிக் கொண்டு மீண்டும் எப்பொழுது அந்த டீயைப் பருகுவோம் என எண்ணம் தோன்ற ஆரம்பிக்கின்றது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tea #special #35100 rupee
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story