×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

120 பேருடன் உடலுறவு.... மனைவிக்கு போதை மருந்து கொடுத்து கணவன் செய்த கொடூரம்! மிரட்டல் மூலம் வெளிச்சத்துக்கு வந்த பகீர் பின்னணி!!!

ஸ்வீடனில் மனைவியை 120 பேருடன் வற்புறுத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய 62 வயது நபர் மீது வழக்கு. போலீஸ் விசாரணை தீவிரம்.

Advertisement

ஐரோப்பிய நாடான ஸ்வீடனில், 62 வயது நபர் ஒருவர் தனது மனைவியை பல ஆண்டுகளாக வற்புறுத்தி பிற ஆண்களுடன் உடலுறவு கொள்ளச் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலில் அவர் பணம் சம்பாதித்ததும் தெரியவந்துள்ளது. தற்போது அந்த நபர் மீது பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

போதை மருந்து கொடுத்து திட்டமிட்ட செயல்

தகவலின்படி, அந்த நபர் தனது மனைவிக்குத் தெரியாமல் போதை மருந்துகள் கொடுத்து, பிற ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்படுமாறு ஏற்பாடு செய்துள்ளார். இதனை அவர் ரகசிய கேமரா மூலம் பதிவு செய்து கண்காணித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த செயல்கள் 2022ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடந்ததாக கூறப்படுகிறது.

மிரட்டல் மூலம் கட்டுப்படுத்திய கணவன்

பாதிக்கப்பட்ட பெண் 2025 அக்டோபரில் போலீசில் புகார் அளித்த பிறகே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. விசாரணையில், தற்கொலை மிரட்டல் விடுத்தும், பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுவேன் என பயமுறுத்தியும் அந்த நபர் மனைவியை கட்டுப்படுத்தியதாக தெரியவந்துள்ளது. இதனால், இது சாதாரண குடும்ப பிரச்சனை அல்ல, திட்டமிட்ட குற்றச்செயல் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கணவனின் நண்பன் செய்த நம்பிக்கை துரோகம்!1 வருடமாக மனைவியை பாலியல் வன்கொடுமை..! சிசிடிவி-யில் நேரலையாகப் பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர்..!!!

120 பேரை தேடும் போலீஸ்

“மனைவியின் சம்மதத்துடன்தான் நடந்தது” என குற்றம் சாட்டப்பட்ட நபர் கூறியுள்ளாலும், போதை மருந்து பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் அவருக்கு எதிராக உள்ளன. தற்போது பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் சுமார் 120 பேரை அடையாளம் காணும் பணியில் ஸ்வீடன் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

 

இதையும் படிங்க: திரையில் ஹீரோ.... ஆனால் நிஜத்தில் இப்படியா? 10 வருடமாக 41 வயது பெண்ணை சீரழித்த பிரபல நடிகர் கைது! பரபரப்பில் பாலிவுட்..!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sweden crime #பாலியல் வன்கொடுமை #Crime news #Women safety #European news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story