×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்தியாவிடம் மேலும் 11 ஆயிரம் கோடி கடன் கேட்கும் இலங்கை..!

இந்தியாவிடம் மேலும் 11 ஆயிரம் கோடி கடன் கேட்கும் இலங்கை..!

Advertisement

ஸ்ரீலங்காவில் அந்நிய செலவாணி கையிருப்பு தீர்த்துக்கொண்டு இருப்பதால் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. இதனால் பாணவீக்கம் அதிகரித்து, விலைவாசி உச்சத்தை தொட்டுள்ளது. எரிபொருள் வாங்கவும் பணம் இல்லாத காரணத்தால், மின்னுற்பத்தி நிலையங்கள் மூடியுள்ளன. இலங்கை முழுவதும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு சிக்கலை எதிர்கொண்டு வரும் இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ள நிலையில், உணவு மற்றும் அத்தியாவசிய பொருளுக்காக 1 பில்லியன் டாலர் (ரூ.7,400) கோடி நிதிஉதவி இந்தியாவால் வழங்கப்பட்டுள்ளது. எரிபொருள் இறக்குமதிக்காக 500 மில்லியன் டாலர் (ரூ.3,700 கோடி) வழங்கப்பட்டுள்ளது.

இதனைத்தவிர்த்து, இலங்கையின் மொத்த கையிருப்பை மேம்படுத்த 400 மில்லியன் அமெரிக்க டாலர் நாணய மாற்று வசதியை இந்தியா அறிவித்து இருக்கிறது. இதோடுமட்டுள்ளது, 515 மில்லியன் டாலர் ஆசிய நாணய யூனியன் தீர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உதவியால் இலங்கையின் அணிய செலாவணி கையிருப்பு கட்டுப்படுத்தப்படும்.

இந்த நிலையில், இந்தியாவிடம் மேலும் ரூ.11 ஆயிரம் கோடி (1.1 பில்லியன் டாலர்) நிதிஉதவி கேட்டு இலங்கை அரசு கோரிக்கை வைத்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#srilanka #India #world #loan
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story