இலங்கை பேரிடர்.. காலாவதியான பொருட்களை அனுப்பி அதிரவைத்த பாகிஸ்தான்.. அதிருப்தியில் மக்கள்.!
இலங்கை மக்களுக்கு காலாவதியான நிவாரண பொருட்களை பாகிஸ்தான் அனுப்பியுள்ளது மக்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.
இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 330 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியா உட்பட பல நாடுகள் மனிதாபிமான அடிப்படையில் நிவாரண பொருட்கள் அனுப்பிய நிலையில், பாகிஸ்தான் காலாவதியான நிவாரண பொருட்களை அனுப்பி அதிர வைத்துள்ளது.
இலங்கை நாட்டில் நவம்பர் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக கனமழை கொட்டி பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக மக்களின் வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இது தொடர்பாக பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்ட தகவலின்படி, இதுவரை 330க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
ஆபரேஷன் சாகர் பந்து:
சுமார் 400 பேர் காணாமல் போன நிலையில், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். கனமழை பாதிப்பு காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருவதாக இணையத்தில் விடீயோக்களும் வெளியாகி வருகின்றன. இலங்கை நாட்டில் துயர நிலை காரணமாக இந்தியா 'ஆபரேஷன் சாகர்பந்து' திட்டத்தின் கீழ் மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து! 6 பேர் உயிரிழப்பு! வெளியான பற்றி எரியும் பரபரப்பு வீடியோ...
53 டன்கள் நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா:
இந்திய கடற்படையின் கப்பல் மற்றும் விமானங்கள் மூலம் இதுவரை 53 டன்களுக்கு மேற்பட்ட உணவு, மருந்துகள் மற்றும் நிவாரண பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளன. சுகன்யா கப்பல் மற்றும் இந்திய விமானப்படையின் மூன்று விமானங்கள் மூலம் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இது மட்டுமன்றி சீனா, பாகிஸ்தான் நாடுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளன.
காலாவதியான பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்:
இந்த நிலையில் பாகிஸ்தான் அனுப்பிய நிவாரணப் பொருட்களில் உணவு மற்றும் மருந்து பொருட்கள் கடந்த 2024 ஆம் ஆண்டே காலாவதியானதாக இருப்பதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவசரகால உதவிக்காக அனுப்பப்பட்ட பொருட்களில் பெரும்பாலானவை பயன்பாட்டுக்கு தகுதியற்றதாக இருந்ததால், இலங்கை அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.