வெற்றியை எட்ட சில நாட்களே... 23 வயது மாணவிக்கு நேர்ந்த விபரீதம்! நடுரோட்டில் நடந்த பயங்கரம்..!!!
இலங்கை கொழும்பு நாவல பகுதியில் திறந்த பல்கலைக்கழகம் அருகே கெப் வாகனம் மோதியதில் 23 வயது பொறியியல் மாணவி உயிரிழந்தார். சாரதியை கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கை கொழும்பு நாவல பகுதியில் உள்ள திறந்த பல்கலைக்கழகம் அருகே நிகழ்ந்த வீதி விபத்தில் 23 வயது பொறியியல் மாணவி உயிரிழந்துள்ளார். பாதசாரி கடவையில் வீதியைக் கடக்க முயன்றபோது, வேகமாக வந்த கெப் ரக வாகனம் அவர் மீது மோதியது. பட்டப்படிப்பை முடிக்க இன்னும் சில நாட்களே இருந்த நிலையில், மாணவி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாதசாரி கடவையில் மாணவி மீது மோதிய கெப் வாகனம்
பல்லேவெல, ஹுங்கமுவ பகுதியைச் சேர்ந்த சக்குனி துவானி என்ற 23 வயது மாணவியே உயிரிழந்தவர். மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கு அருகே அவர் பாதசாரி கடவையில் வீதியைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது வேகமாக வந்த கெப் ரக வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார்.
இதையும் படிங்க: அதிர்ச்சி! தேவாலயத்தில் பாடுப்பட்ட சிலுவை சரிந்து விழுந்து பாதிரியார் பரிதாப பலி..! நேரலை வழிபாட்டில் நடந்த கொடுமை.... பகீர் வீடியோ..!!!
தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களால் உயிரிழப்பு
விபத்தில் படுகாயமடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று மற்றும் மரண விசாரணை நடத்தப்பட்டது. தலையிலும் மண்டை ஓட்டிலும் ஏற்பட்ட பலத்த காயங்களே மரணத்திற்குக் காரணம் என மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வாகன சாரதி கைது; பொலிஸார் விசாரணை
பொறியியல் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடிக்க சில நாட்களே எஞ்சியிருந்த நிலையில் மாணவி உயிரிழந்தது குடும்பத்தினருக்கும் பல்கலைக்கழகத்தினருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, விபத்தை ஏற்படுத்திய கெப் வாகனத்தின் சாரதியை போலிஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வரும் நிலையில், மிரிஹான போலிஸார் மேலதிக விசாரணைகளையும் சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மகளை கொன்றுவிட்டு அவசர உதவி எண்ணை அழைத்த தாய்! நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்..!!!