ஒரு பக்கம் பாம்பு.... இன்னொரு பக்கம் சிலந்தி! வெறும் 0.2 வினாடியில் வேட்டை.... அசையாமலே அட்டேக்! ஈரானில் மிரள வைக்கும் அபூர்வ பாம்பு! வைரலாகும் வீடியோ..!!!
சிலந்தி போல வால் அசைத்து பறவைகளை ஏமாற்றும் அபூர்வ பாம்பின் வீடியோ வைரல். ஈரானில் காணப்படும் இந்த விரியன் விஞ்ஞானிகளையும் ஆச்சரியப்படுத்துகிறது.
சமூக வலைதளங்களில் ஒரு வினோதமான வீடியோ வேகமாக பரவி வருகிறது. முதலில் அது நீண்ட கால் கொண்ட சிலந்தி போல தோன்றும். ஆனால் அடுத்த கணம் அது ஒரு பாம்பாக மாறி பார்ப்பவர்களை அதிர்ச்சியடையச் செய்கிறது. தற்போது இந்த காட்சி பெரும் பேசுபொருளாகி உள்ளது.
சிலந்தி போலவே வால்… அதுவே வலை
இந்த உயிரினம் ஸ்பைடர்-டெய்ல்ட் ஹார்ன்ட் வைப்பர் எனப்படும் அபூர்வ விரியன். ஈரானின் மலைப்பகுதிகளில் வாழும் இதன் அறிவியல் பெயர் Pseudocerastes urarachnoides. இதன் வால் பகுதி ஒரு பெரிய சிலந்தியைப் போலவே அமைந்திருக்கும். நீண்ட இழைகள் கால்களைப் போல தோன்றும். பாம்பு வாலை மெதுவாக அசைக்கும் போது, அது உண்மையில் சிலந்தி நகர்வைப் போலவே காட்சியளிக்கிறது.
வியப்பூட்டும் வேட்டைத் தந்திரம்
பாறைகளின் நிறத்தோடு கலந்து மறைந்து கிடக்கும் இந்தப் பாம்பு, மணி நேரங்கள் அசையாமல் காத்திருக்கும். வாலை மட்டும் சிலந்தி போல அசைத்து பறவைகளை அருகில் வரவழைக்கும். இதனால், எளிதாக வேட்டை கிடைக்கிறது. தகவலின்படி, வெறும் 0.2 வினாடிகளில் பறவையை பிடிக்கும் வேகத்தில் இது தாக்குகிறது. இந்த வேட்டை தந்திரம் தான் இதன் மிகப்பெரிய தனிச்சிறப்பு.
இதையும் படிங்க: அம்மாடியோவ்... நூடுல்ஸ் போல சுருட்டி மலைப்பாம்பை விழுங்கிய ராஜ நாகம்! வைரலாகும் அதிர்ச்சியூட்டும் வேட்டை வீடியோ!
விஞ்ஞானிகளை குழப்பிய கண்டுபிடிப்பு
1968-ஆம் ஆண்டு முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது, இதன் வாலில் ஏதோ நோய் இருப்பதாகவே விஞ்ஞானிகள் நினைத்தனர். பின்னர் 2006-ல் நடந்த ஆய்வில் தான், இது ஒரு நுட்பமான வேட்டை யுக்தி என உறுதி செய்யப்பட்டது. மேற்கு ஈரானின் ஜாக்ரோஸ் மலைப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் இந்தப் பாம்பு, தற்போது அரிய உயிரினங்களின் பட்டியலில் உள்ளது. சமீபத்தில் வெளியான வீடியோவையும் லட்சக்கணக்கானோர் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.