×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கணவருக்கு தெரியாமல் மனைவி செய்த காரியம் - கடைசியில் உற்சாகத்தில் கணவர்.

Soppana get Lattery price

Advertisement

கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சொப்னா -பிரேம் தனது மகள் நட்சத்திரவுடன் ஐக்கிய அமீரகத்தின் அபுதாபியில் கடந்த 9 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். 

மனைவி சொப்னா அபுதாபியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிகிறார்.

அபிதாபியில் பிக் டிக்கெட் என்ற லாட்டரி சீட்டு ஒன்று இயங்கி வருகிறது. அதன் குலுக்கல் சமீபத்தில் நடந்தது. இந்த லாட்டரி சீட்டை மனைவி சொப்னா தனது கணவர் பிரேமுக்கு தெரியாமல் வாங்கியிருந்தார். 

ஆனால் சொப்னா வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.22 கோடியே 47 லட்சம் பரிசு கிடைத்துள்ளது. 

லாட்டரியில் பரிசு விழுந்த பிறகு தான் சொப்னா லாட்டரி வாங்கியது குறித்தும் அதற்கு பரிசு கிடைத்த தகவலையும் கணவரிடம் கூறியுள்ளார்.

இதனால் அவரது கணவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். தனது மகள் நட்சத்திராவின் அதிர்ஷ்டமே இதுவரையிலான தங்களின் அனைத்து முன்னேற்றத்திற்கும் காரணம் என சொப்னா கூறியுள்ளார். 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Soppana #Lottery #price
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story