×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அச்சச்சோ... 49-வது மாடியிலிருந்து விழுந்து... இறந்த டேர் டெவில்.!

அச்சச்சோ... 49-வது மாடியிலிருந்து விழுந்து... இறந்த டேர் டெவில்.!

Advertisement

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சாகச கலைஞரான ரெமி லூசிடி ஹாங்காங் நாட்டின் 68 மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம்  அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஹாங்காங் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 30 வயதான ரெமி லூசிடி உயரமான கட்டிடங்களில் ஏறி  அவற்றில் சாகசங்கள் செய்து சமூக வலைதளங்களில் அவற்றை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டவர். இவர் இணையதள வாசிகளால் டேர் டெவில் என அழைக்கப்பட்டவர்.


ஹாங்காங் நாட்டிற்குச் சென்ற இவர் அங்குள்ள 68 மாடிகளை கொண்ட ட்ரீகண்டர் டவர் என்ற கட்டிடத்தில் சாகசம் செய்வதற்காக ஏறிய போது  துரதிஷ்டவசமாக தவறி விழுந்து உயிரிழந்திருக்கிறார்.. அந்த டவரின் பாதுகாவலர்களிடம் ஒரு நபரை சந்திக்க செல்வதாக கூறி விட்டு சென்ற இவர்  கட்டிடத்தில் ஏறி சாகசம் செய்திருக்கிறார்.


68 மாடிகளை கொண்ட அந்த கட்டிடத்திலிருந்து கீழிறங்கும் போது 49 -வது மாடியில் தவறி விழுந்துள்ளார். அப்போது அந்தரத்தில் தொங்கிய அவர்  காவல்துறைக்கு தகவல் தெரிவித்து தன்னைக் காப்பாற்றுமாறு அங்கு இருந்த பணியாளரிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் துரதிஷ்டவசமாக அங்கிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது கேமராவும் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டிருக்கிறது

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#world #homg kong #dare devil #sky scrapper #dead
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story