×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

15 ஆண்டுகளாக தம்பியுடன் குடும்பம் நடத்திய அக்கா! இறுதியில் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு!

sister living with brother

Advertisement

அமெரிக்காவில் ப்ளோரிடாவைச் சேர்ந்த டெபி என்ற 51 வயது நிரம்பிய பெண் அவரது 38 வயது நிரம்பிய சகோதரன் ஜோ எனபவருடன் 15 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த பிறகு சட்டப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

டெபி சிறு வயதிலேயே தத்துக் கொடுக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் அவரது 35 வயதில் தனது உண்மையான பெற்றோரைத் தேடிக் கண்டுபிடித்திருக்கிறார். அப்போது அவரது தந்தை தனக்கு இன்னொரு மகன் இருப்பதாக தெரிவித்து அவரது புகைப்படத்தைக் கொடுத்துள்ளார்.

அப்பொழுது தான் டெபி முதன் முறையாக ஜோவை நேரில் பார்த்துள்ளார். அவரை பார்த்தவுடனே அவர் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டு காதல் உருவாகியுள்ளது. அவரே அதனை தனது சகோதரனிடம் Genetic Sexual Attraction (GSA) என்னும் பிரச்சினை இருப்பதாக தெரிவிக்கிறார். GSA என்பது ஒருவரது தூரத்து உறவினர்கள் மீது அவருக்கு காதல் ஏற்படும் ஒருவித பிரச்சினை ஆகும்.

இரண்டாவது முறை சந்திக்கும்போதே உடல் ரீதியாக தாங்கள் இணைந்ததாகவும், அதில் தங்களுக்கு எவ்வித குற்ற உணர்ச்சியும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கிறார் டெபி. இதேபோல் 10 ஆண்டுகள் ரகசியமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். பின்னர் 15 ஆண்டுகளுக்குப்பின் சட்டப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sister #brother #marriage
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story