×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இளம் பாடகியின் மோசமான செயலால் அதிர்ந்து போன பிரபலங்கள்! இதுதான் காரணமா.

Singer America

Advertisement

பிரபல பாப் பாடகி விருது விழாவிற்கு மேலாடை அணியாமல் வந்து ஒட்டு மொத்த மீடியாவையும் திரும்பி பார்க்க வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் லத்தீன் கிராமி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் திரைத்துறையை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். 

அப்போது அந்த விழாவிற்கு சிலி நாட்டை சேர்ந்த 36 வயதான பிரபல பாப் பாடகி மோன் லாஃபர்டேவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து அவரும் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்துள்ளார்.

ஆனால் அவர் விருது விழாவிற்கு வரும் போது ஒட்டு மொத்த மீடியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். காரணம் அவர் மேலாடையின்றி அரை நிர்வாணமாக விழாவிற்கு வந்துள்ளார். இதனை பார்த்த பிரபலங்கள் பலர் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் ஒரு சிலர் அவரை வெச்ச கண்ணு வாங்காமல் பார்த்துள்ளனர். மேலும் அவர் மார்பில் அவர்கள் டார்ச்சர் செய்கிறார்கள், பலாத்காரம் செய்து கொன்றுவிடுகிறார்கள் என்று சிலி மொழியில் எழுதியிருந்தது. அவ்வாறு அவர் எழுதியதற்கு முக்கிய காரணம், சிலியில் கடந்த மாதம் போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் எழுந்தது.

அப்போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் எடுத்த நடவடிக்கையில் 20 பேர் கொல்லப்பட்டனர். இதனை கண்டிக்கும் வகையில் பாடகி மோன் லாஃபர்டே மேலாடை இன்றி விருதை பெற்றார். மேலும், அந்த விருதை சிலி மக்களுக்கு சமர்ப்பிப்பதாகவும் அவர் கூறினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Moan #singer #America
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story