×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிகிரெட் பிடிக்க கூடாதுன்னு சொல்ற? சாவு.. இளம்பெண்ணுக்கு ரயிலில் நேர்ந்த சம்பவம்.. பகீர் காட்சிகள்.!

ரஷ்யாவில் ரயில் பயணத்தின்போது, பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை குறித்த அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

Advertisement

புகைப்பழக்கத்தை கண்டித்த ரயில் பணிப்பெண் ஒருவர் தாக்கப்பட்டார்.

ரஷ்யாவில் அதிர்ச்சி:

புகை உடல் நலத்திற்கு தீங்கு என்பது உலகளாவிய விழிப்புணர்வு தேவையாக இருந்தாலும், அதனை பிடிப்போரின் எண்ணிக்கை குறைவதில்லை. மேலும், அதனை கண்டிக்கும் நபர்களின் மீதான தாக்குதலும் உலகளவில் ஒருசில இடத்தில் தொடர்கின்றன. ரஷ்யா நாட்டில் உள்ள கோஸ்டரோமா ஒப்ளாஸ்ட், போனஸ்ய்ரவோ ரயில் நிலையத்துக்கு முன்பு, சம்பவத்தன்று ரயில் ஒன்று சிக்னலுக்காக காத்திருந்துள்ளது. இந்த ரயில் செல்யன்பிஷ்க் பகுதியில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம் நோக்கி சென்றுகொண்டு இருந்தது.

இதையும் படிங்க: தனியார் பள்ளியில் 4 வயது குழந்தையை காலால் மிதித்து கழுத்தை நெரித்த பெண் ஊழியர்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ.!

ரயில் பயணத்தில் அதிர்ச்சி:

அப்போது, ரயில் பயணியான இளைஞர் ஒருவர், ரயிலில் கதவுக்கு அருகில் வந்து புகைபிடிக்க ஆயத்தமாகியுள்ளார். அப்போது, ரயிலில் வந்த பணிப்பெண் இரினா டமிட்த்டிரிவா இளைஞரை கண்டித்து இருக்கிறார். பின் பெண் கதவு அருகே நின்று வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார். 

பெண் உயிர்தப்பினார், ஆனால் காயம்:

அந்த நேரத்தில், பணிப்பெண் தன்னை புகைபிடிக்க அனுமதிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் இருந்த நபர், பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளி இருக்கிறார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக ரயிலை நிறுத்தி பெண்ணுக்கு உதவி செய்துள்ளனர். சம்பவ இடத்திற்கு காவல்துறை அதிகாரிகளும் நேரில் வந்துள்ளனர். பெண் தற்போது இடுப்பு எலும்பு காயம், கையில் காயம் என மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். இந்த குற்றத்தை அரங்கேற்றிய நபரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்துள்ளனர். 

வீடியோ வைரல்:

தற்போது இந்த சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ பதறவைக்கும் வகையில் அமைந்துள்ளது. பெண்ணை இளைஞர் தள்ளிவிடும்போது, மற்றொரு ரயில் தண்டவாளத்தில் ரயில் சென்றுகொண்டு இருந்தது. பெண், அவர் பயணம் செய்த ரயில் அருகே விழுந்ததால் காயத்துடன் உயிர் தப்பி இருக்கிறார். இந்த சம்பவம் மார்ச் 30, 2026 அன்று நடந்த நிலையில், வீடியோ வைரலாகி வருகிறது.

பதறவைக்கும் வீடியோ:

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#World news #russia #Cigarette
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story