கோரோனோ வைரஸை கட்டுப்படுத்த சீனாவில் அதிரடியாக தடை செய்யப்பட்டுள்ள உணவுவகைகள்!
sea foods are restricted at china for corono virus

சீனாவில் பரவ துவங்கியுள்ள கோரோனோ வைரஸ் தாக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர சீனாவில் வன விலங்குகள் மற்றும் கடல் உணவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வுஹான் மாகாணத்தில் கடல் உணவுகளை விற்பனை செய்யும் இரண்டு சந்தைகளில் இருந்து தான் இந்த கொடிய கோரோனோ வைரஸ் பரவியிருக்க கூடும் என நம்பப்படுகிறது. குறிப்பாக அங்கு விற்கப்படும் வெளவால்கள் மற்றும் பாம்பு உணவுகள் மூலமாக தான் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள அந்த வுஹான் நகரம் மற்ற நகரங்களில் இருந்து துண்டிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நகரத்திற்கான போக்குவரத்துக்கு மற்றும் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த கொடிய வைரஸ் பரவுவதை கட்டுக்குள் கொண்டு வர சீனாவில் வன விலங்குகள் மற்றும் கடல் உணவுகள் விற்பனைக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வன விலங்குகள் வளர்ப்பு பண்ணைகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.