Video: ஸ்கூட்டரில் மினி குவாட்டர் கடை! அதிகாரிகளை கூட ஆச்சரியத்தில் ஆழ்த்திய காணொளி வைரல்...
Video: ஸ்கூட்டரில் மினி குவாட்டர் கடை! அதிகாரிகளை கூட ஆச்சரியத்தில் ஆழ்த்திய காணொளி வைரல்...

ஹல்த்வானியில் ஸ்கூட்டர்ரில் மதுக்கடை. அதிகாரிகளை கூட ஆச்சரியத்தில் ஆழ்த்திய திடுக்கிடும் சம்பவம்!
உத்தரகண்ட மாநிலம் ஹல்த்வானியில் சமீபத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவம், சமூக ஊடகங்களில் வைரலாக பரவி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு நபர் தனது ஸ்கூட்டரை முற்றிலும் ஒரு மினி மதுபான கடையாக மாற்றியுள்ள அதிர்ச்சி சம்பவம் தற்போது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்கூட்டர் உள்ளே மதுபானங்கள்!
சாலையில் கலால் துறையினர் நடத்திய திடீர் சோதனையின் போது, அந்த ஸ்கூட்டரில் இருந்து 50 குவாட்டர் மற்றும் 5 அரை பாட்டில்கள் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையின் போது, அந்த நபர் ஸ்கூட்டரின் முன்பக்கத்திலும், சீட்டின் அடிப்பகுதியிலும் பாட்டில்களை நேர்த்தியாக மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் @askbhupi என்ற பக்கத்தில் பதிவிடப்பட்டு வருகிறது. வீடியோவில், அதிகாரிகள் அந்த ஸ்கூட்டரிலிருந்து பாட்டில்களை எடுத்து வரிசையாக வைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுவரை 42,000-க்கும் அதிகமான பார்வைகள் பெற்றுள்ள இந்த வீடியோ, பல நகைச்சுவை விமர்சனங்களையும் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: Video : கனமழையால் டெல்லி ஏர்போர்ட்டில் திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை! வைரலாகும் வீடியோ காட்சி...
அதிகாரிகள் அதிர்ச்சி, கண்காணிப்பு தீவிரம்
இந்த விசித்திர முயற்சி அதிகாரிகளையும் சற்றே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், சட்டவிரோதமாக மதுபான விற்பனையை தடுக்க காவல்துறையும் கலால் துறையும் கண்காணிப்பை மேலும் தீவிரமாக்கியுள்ளன.
இது போன்ற செயல்கள் சமூகத்தில் தவறான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், இவற்றை முற்றிலும் ஒழிக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மாமியாரின் மாஸ்டர் பிளானால் பரிதாபமாக இறந்த மருமகள்! காரணம் என்ன? அதிர்ச்சி சம்பவம்...