பள்ளி மாணவனுடன் உறவு கொண்ட பெண் ஆசிரியை!. பெற்றோர் எடுத்த அதிர்ச்சி முடிவு!.
school teacher affair with student
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள விமானநிலைய பள்ளியில் துணை தலைமையாசியராக இருப்பவர் டாவ்ன் ப்ரோபிட். 44வயது நிரம்பிய இவர் தன்னுடைய பள்ளியில் பயிலும் 19 வயது மாணவனுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.
இதனால் தன்னுடைய வீட்டிற்கும் மாணவனை அழைத்துச்சென்று பழகியுள்ளார். அதேபோல் பள்ளி வளாகத்திலும் அவ்வாறு பழகியுள்ளார். இதை பற்றிய தகவல் மாணவனின் பெற்றோருக்கு தெரியவந்ததால், இது குறித்து மாணவரின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆசிரியையை ஆஜர்படுத்தியுள்ளனர். அப்போது மாணவன் 19 வயது என்றாலும் வளாகத்தில் இது போன்ற செயலில் ஈடுபடுவது ஒழுக்கமற்றது என்று கூறி, கடந்த வெள்ளிக்கிழமை டாவ்ன் ப்ரோபிட்-க்கு 30 நாட்கள் சிறை தண்டனை, அல்லது 200 டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.