×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

டிரம்ப்புக்கு சவூதி கொடுத்த பகீர் எச்சரிக்கை! அதை முற்றுகையிட்டு இந்த வழியையை கையில் எடுங்க..! மத்திய கிழக்கில் அடுத்தடுத்து அரங்கேறும் பகீர் திருப்பங்கள்..!!

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகையை கைவிட அமெரிக்காவை சவுதி அழுத்தம். எண்ணெய் விலை உயர்வு, மத்திய கிழக்கு பதற்றம் அதிகரிப்பு குறித்து கவலை.

Advertisement

மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் தீவிரமாகும் சூழலில், ஈரானை நோக்கி அமெரிக்கா மேற்கொண்டுள்ள ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகையை கைவிடுமாறு சவுதி அரேபியா வலியுறுத்தி வருகிறது. இந்த நடவடிக்கை பிராந்திய அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எனவும், உடனடியாக பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் எனவும் சவுதி அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டம், மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று சவுதி கருதுகிறது. இதனால், பேச்சுவார்த்தை வாய்ப்புகள் குறையக்கூடும் என்ற அச்சமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ வெளியிட்ட தகவலின்படி, இந்த Hormuz Strait முற்றுகையை கைவிட்டு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு அமெரிக்காவை சவுதி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

எண்ணெய் போக்குவரத்து மாற்றம்

ஹார்முஸ் வழித்தடம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சவுதி தனது கச்சா எண்ணெயை பாலைவன வழித்தடம் மூலம் செங்கடல் துறைமுகங்களுக்கு மாற்றி அங்கிருந்து ஏற்றுமதி செய்து வருகிறது. இதையடுத்து, அமெரிக்கா ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ளதால், அதற்கு பதிலடி நடவடிக்கையாக ஈரான் தனது ஆதரவு பெற்ற ஹூதி குழுக்களின் மூலம் ‘பாப் அல்-மந்தேப்’ ஜலசந்தியையும் முடக்கக்கூடும் என அச்சம் நிலவுகிறது. அது நடந்தால் சவுதியின் மீதமுள்ள ஏற்றுமதிக்கும் தடையாகும் அபாயம் உள்ளது.

இதையும் படிங்க: அபாயம் அதிகரிப்பு.... டிரம்பின் 48 மணி நேர எச்சரிக்கை! ஹார்முஸ் ஜலசந்தியை திறங்க, இல்லன்னா..... நாங்க அடிக்குறத நீங்க தாங்க மாட்டீங்க...ஈரான் மீது டிரம்ப் பகிரங்க எச்சரிக்கைக!!!

உலக சந்தையில் தாக்கம்

இந்த நிலைமையின் தாக்கமாக உலகளவில் எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலரைத் தாண்டியுள்ளது. இது பல நாடுகளின் பொருளாதாரத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையில், ஈரானின் உயர்நிலை அதிகாரிகள் அமெரிக்கா மீண்டும் தவறான முடிவுகளை எடுத்தால், உலகளாவிய எரிசக்தி விநியோகம் கடுமையாக பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். பல ஆண்டுகளாக நிலவி வந்த பிராந்திய உறவுகள் சிதைந்து வரும் நிலையில், பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வாக இருக்கும் என வளைகுடா நாடுகள் கருதுகின்றன.

 

இதையும் படிங்க: போர் அபாயம் அதிகரிப்பு! அணு மையங்களை வான்வழித் தாக்குதலில் சிதைத்த இஸ்ரேல்... ஈரான் "பதிலுக்கு பதில்" இனி இல்லை! இனி பெரும் அபாயம் தான்...உலகப் பொருளாதாரத்திற்குப் பேரிடி.!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Hormuz Strait #saudi arabia #US Iran tensions #எண்ணெய் விலை #Middle East crisis
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story