பயணி போல ஏறி படகில் சவாரி சென்ற குரங்கு! அதுக்குள்ள என்ன அவசரம்ன்னு தெரியல... ஆற்றில் குதித்து அது செஞ்ச வேலையை பாருங்க! வைரல் வீடியோ...!!!
மலேசியாவின் சரவாக் பகுதியில் ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்த மூக்குக் குரங்கு மீனவர்களின் படகில் ஏறி கரை சேர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மலேசியாவின் சரவாக் பகுதியில் ஆற்றின் வேகமான நீரோட்டத்தை கடக்க முடியாமல் தவித்த மூக்குக் குரங்கு ஒன்று, மீனவர்களின் படகில் ஏறி பயணம் செய்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. படகில் ஏறியதும் எந்த பதற்றமும் இல்லாமல் பயணி போல அமர்ந்த குரங்கின் செயல், நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
மீனவர்களின் படகை நாடிய மூக்குக் குரங்கு
ஆற்றில் நீந்திக் கொண்டிருந்த குரங்கு, நீரோட்டத்தை சமாளிக்க முடியாமல் சோர்வடைந்த நிலையில் காணப்பட்டது. இதை கவனித்த இரு மீனவர்கள், தங்களது படகை மெதுவாக அதன் அருகே கொண்டு சென்றனர். அப்போது சற்றும் தயங்காமல் படகில் ஏறிய குரங்கு, வசதியாக அமர்ந்து மறுகரையை நோக்கிய பயணத்தைத் தொடங்கியது.
பாதியிலேயே குதித்து... மீண்டும் படகுக்குள் ஏறியது
பயணம் சுமூகமாக சென்றுகொண்டிருந்த நிலையில், திடீரென பொறுமையிழந்த குரங்கு ஆற்றில் குதித்தது. ஆனால் வேகமான நீரோட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் போனதும், உடனடியாக மீண்டும் படகை நோக்கி வந்தது. மீனவர்கள் உதவியுடன் மீண்டும் படகில் ஏறிய குரங்கு, அதன் பிறகு கரை சேரும் வரை பயணத்தைத் தொடர்ந்தது.
நெட்டிசன்களின் கமெண்ட்டுகளில் குவியும் சிரிப்பு
இறுதியில் மீனவர்கள் குரங்கை பாதுகாப்பாக கரையில் இறக்கிவிட்டனர். பொதுவாக மூக்குக் குரங்குகள் சிறந்த நீச்சல் திறன் கொண்டவை என்றாலும், ஆற்றின் வேகமான நீரோட்டம் மற்றும் முதலைகள் போன்ற வேட்டையாடிகளால் அவற்றின் பயணம் ஆபத்தானதாக இருக்கக்கூடும். இதனிடையே வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், குரங்கின் படகுப் பயணத்தை தங்களது பாணியில் நகைச்சுவையாக பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, “தன் ஸ்டாப்பை மிஸ் பண்ணிட்டு மறுபடியும் படகுல ஏறிட்டான்... இன்னும் டிக்கெட் காசு கொடுக்கல” என்ற வகையிலான கமெண்ட்டுகள் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகின்றன.
இதையும் படிங்க: ஐயோ... என்ன இதெல்லாம்... PG பெண்கள் அறையை வீடியோ வெளியிட்டு உண்மையை உடைத்த வாலிபர்! ஷாக் வீடியோ....!!!