ஆபத்தில்லாத முறையில் கொசுவை விரட்ட.. செம்ம ஐடியா.! இப்போதே ட்ரை பண்ணுங்க.!
ஆபத்தில்லாத இயற்கை முறையில் கொசுவை விரட்ட.. செம்ம ஐடியா.! இப்போதே ட்ரை பண்ணுங்க.!
மழைக்காலமானாலும், வெயில்காலமானாலும் கொசுக்கடியும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடியவை. எத்தனை கொசு விரட்டிகள், சுருள்கள் பயன்படுத்தினாலும் காலை, பகல், இரவு என எப்போதும் சுற்றி வந்து நோய்க்கிருமிகளை பரப்புவதில் கொசு முக்கிய பங்காற்றுகிறது. அதே வேளையில், கொசுவினை கொள்ளும் திரவம், சுருள், களிம்புகளின் மூலமாக மேலும் புதிய உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன.
கொசு சுருள், திரவம் என இவற்றை நாம் வீட்டிற்குள் சுவாசிக்கும் போது அதன் மூலம் நமக்கு சுவாசப்பிரச்சனை மற்றும் பல்வேறு நுரையீரல் சம்மந்தப்பட்ட நோய்கள் உண்டாகின்றன. எனவே, நம் உடல் நலத்திற்கு பாதிப்பில்லாதவகையில் வீட்டில் இருக்கின்ற இயற்கை பொருள்களை வைத்து எவ்வாறு கொசுக்களை விரட்டலாம் எனப் பார்க்கலாம்.
கொசுக்களை விரட்டுவதற்கு பூண்டு மிகச்சிறந்த பொருள். பூண்டில் இருந்து வருகின்ற வாசனை கொசுக்களை விரட்டி அடிக்கும். இதற்கு 5 -10 பூண்டு துண்டுகளை எடுத்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு சிறிய பாட்டிலில் தண்ணீர் நிரப்பி அதனுடன் இந்த பூண்டு துண்டுகளைச் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது இந்த கரைசல் தண்ணீரை வீடு முழுவதும் தெளிக்கவும். இவ்வாறு செய்வதால் கொசுக்களின் தொல்லை வீட்டில் இருக்காது.
இதையும் படிங்க: ஆபத்தில்லாத இயற்கை முறையில் கொசுவை விரட்ட.. செம்ம ஐடியா.! இப்போதே ட்ரை பண்ணுங்க.!
கற்பூரத்தின் வாசனைக்கு கொசுக்கள் வராது. அதற்கு,வீட்டின் கதவுகளை மூடிவிட்டு கற்பூரம் ஏற்ற வேண்டும். கற்பூரத்தை ஏற்றி அரை மணி நேரம் கழித்து, எல்லா கதவு மற்றும் ஜன்னல்களைத் திறக்க வேண்டும். கற்பூர வாசனை கொசுக்களை ஈர்க்காது. இதனால், கொசுக்கள் வீட்டிற்குள் வருவதற்கு வாய்ப்பில்லாமல் போகும்.
நம் சருமத்தில் ரசாயனங்கள் கலந்த கிரீம்களை பயன்படுத்துவதற்கு பதில் வேப்பெண்ணை பயன்படுத்தலாம். வேப்ப எண்ணெயை சருமத்தில் நேரடியாக தடவாமல், தண்ணீரில் கலந்து கை, கால்களில் தடவலாம்.,வெளியே தெரிகின்ற உடல் பாகங்களில் தேய்க்கலாம். இப்படி செய்வதால் கொசுக்கள் உடலுக்கருகில் வரமால் ஓடிவிடும்.
எலுமிச்சை பழத்தை பயன்படுத்தியும் கொசுக்களை விரட்ட முடியும். கிராம்பில் எலுமிச்சை சாறு சேர்த்து வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் வைக்கலாம். அல்லது, துளசியை நன்றாக அரைத்து சாறு தயார் செய்து வைத்து அந்த சாறினை ஒரு பாட்டிலில் அடைத்து அதனை தினமும் காலை, மாலை கொசு விரட்டும் தெளிப்பானாக பயன்படுத்தலாம்.