நிலநடுக்கத்தில் கொந்தளித்த கடல்! பாறைகளின் சரிவு! உயிர்பிழைக்க தவித்த கடல் சிங்கங்களின் பரிதாப நிலை! வைரலாகும் வீடியோ...
ரஷ்யாவில் நிலநடுக்கம் காரணமாக பாறைகள் சரிந்ததால் கடல்சிங்கங்கள் தப்பிக்க கடலில் குதிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இயற்கை உயிரினங்களும் தங்களது பாதுகாப்பைத் தேடி போராடும் நிலையில், ரஷ்ய கடல்சிங்கங்கள் தவிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கம்சட்காவில் 8.7 ரிக்டர் நிலநடுக்கம்
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதியில் 8.7 ரிக்டர் அளவிலான பெரும் நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கடல் பகுதியில் 4 மீட்டர் உயரமுள்ள சுனாமி அலைகள் எழுந்து, ரஷ்யா மற்றும் ஜப்பானில் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கடல்சிங்கங்கள் உயிர்தப்பிய பரபரப்பான காட்சி
இந்த நிலநடுக்கத்தால், ரஷ்யாவின் குரில் தீவுகளில் பாறைகள் சரிவடைந்தன. இதனைத் தொடர்ந்து ஸ்டெல்லர் இன கடல்சிங்கங்கள், கூட்டம் கூட்டமாக கடலுக்குள் குதித்து உயிர்தப்ப முயற்சித்தன. பேராசிரியர் குரோமோவ் மற்றும் கப்பல் ஊழியர் நிகிதா சின்சினோவ் எடுத்த வீடியோவில், கடல்சிங்கங்கள் பாறைகளின் சரிவினால் ஏற்பட்ட சத்தத்தில் பயந்து, கொந்தளிக்கும் கடலுக்குள் தப்பி ஓடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இதையும் படிங்க: மகனுக்கு பீட்சா கொடுத்து மாட்டிக்கொண்ட ரோகினி! மீனா கூறியதை வைத்து முத்து கண்டுபிடிக்கும் உண்மை! சிறக்கடிக்க ஆசை ப்ரோமோ வீடியோ...
வீடியோ வெளியானதும் பரபரப்பு
இக் காணொளி வெளியாகியவுடன், சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இயற்கையின் கொடூரத்திலிருந்து தப்பிக்கும் இந்த கடல் உயிரினங்களின் செயல், பலரது மனதையும் பாதித்துள்ளது.
இயற்கை பேரழிவுகளின் நேரத்தில் மனிதர்கள் மட்டுமின்றி, கடல் உயிரினங்களும் தங்கள் உயிரைக் காப்பாற்ற போராடும் பரிதாபமான நிலைமை, இந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: ரஷ்யாவின் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி அலைகள்! இணையத்தில் வைரலாகும் வீடியோ...