×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குப்பையை பொறுக்கி, வாழ்க்கையை ஓட்டி வந்தவருக்கு அடித்த பேரதிர்ஷ்டம்! அதன் விலைமதிப்பு இவ்வளவா?

rubbish collector find cosltly yello wax in sea

Advertisement

தாய்லாந்தை சேர்ந்தவர் சோம்ஷக் பூன்ரிட். 45 வயதி நிறைந்த இவர் ஆரம்பத்தில் மீனவராக இருந்து வந்துள்ளார்.ஆனால் புயலில் அவரது படகு மற்றும் பிற பொருட்கள்  சேதமடைந்த நிலையில் அவர் கடற்கரையில் குப்பைகளை பொருக்கி அவற்றை விற்று வாழ்க்கையை ஓட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் குப்பைகளை சேகரித்து கொண்டிருந்த போது அவருக்கு மஞ்சள் நிற மெழுகு போன்ற பொருள் கிடைத்துள்ளது. நடுக்கடலில் உள்ள திமிங்கலங்கள் அரிதான மீன்களை சாப்பிட்ட பிறகு அது செரிக்காமல் குடலிலேயே தங்கி விடும். அது பெரிய பந்து போல் உருவாகி இருக்கும் அதனை நெடுநாட்களுக்கு பிறகு திமிங்கலம் வாந்தியாக வெளியேற்றும்.

மெழுகு போல இருக்கும் அந்த பொருள்  வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விலைமதிப்பும் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு  மிகவும் அதிகமாக இருக்கும்.தொடர்ந்து அந்த பொருளை எடுத்து வந்த சோம்ஷக் அதனைத் தனது உறவினர்களிடம் காட்டி அது திமிங்கிலத்தின் வாந்திதான் என்பதை உறுதி செய்துகொண்டார். 

மேலும் அதனை தீயில் சூடுபடுத்திய போது அது மெழுகு போன்று உருகியுள்ளது. இந்நிலையில் அதன் எடையை வைத்து அதன் மதிப்பு 80000 பவுண்ட் அதாவது இந்திய மதிப்பில் படி 1, 85, 29, 783 ரூபாய் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் திமிங்கிலத்தின் வாந்தி விற்கப்பட்டால் சோம்ஷக் அதில் கிடைக்கும் பணத்தை வைத்து படகை வாங்க திட்டமிட்டுள்ளார். இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#thailand #garbage #dolphin vomit
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story