×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வங்கி ஊழியருக்கு துண்டுசீட்டு கொடுத்து, ஆர்பாட்டமின்றி நடந்த வித்தியாசமான கொள்ளை! வைரலாகும் ஷாக் புகைப்படம்!

Robber gave slip notes to bank officers for robbery

Advertisement

அமெரிக்காவில் எத்தகைய ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியான முறையில் வங்கி ஒன்றில் நபரொருவர் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்கா டெக்ஸாஸில் உள்ள வுட்பாரஸ்ட் என்ற வங்கியின் உள்ளே, முகம் வெளியே சிறிதும் தெரியாத அளவிற்கு கருப்புநிற மாஸ்க் மற்றும் கர்ச்சீப் அணிந்து நபர் ஒருவர் நுழைந்துள்ளார். அவர் அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவரிடம் குறிப்பு எழுதிய சிறிய பேப்பர் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

 இதில் எனக்கு கொரோனா  நிதியுதவியாக கொடுப்பதாக கூறி இருந்த பணம் கிடைக்கவில்லை. மேலும் கொரோனா பரவலால்  எனது வேலையும் போய்விட்டது. எனவே நான் வந்திருக்கும் வேலையை அமைதியாக முடித்து விடுங்கள். நான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை. ஆனால் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் நீங்கள் ஏதாவது செய்தால் நான் சுட தொடங்கிவிடுவேன். போய் பணத்தை எடுத்து வாருங்கள். மற்றவர்கள் கவனிக்கும் வகையில் எதுவும் செய்யவேண்டாம் என அந்த பேப்பரில் எழுதி இருந்துள்ளது.

இதனைக் கண்ட வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தாலும்,  எதுவும் நடக்காதது போல அமைதியாக சென்று பணத்தை எடுத்து வந்து அந்த நபரிடம் கொடுத்துள்ளார்.மேலும்  அந்த நபரும் அமைதியாக பணத்தை வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

பின்னர் அவர் சென்ற உடனேயே  வங்கி ஊழியர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில், போலீசார்கள் சிசிடிவி கேமராக்களை கொண்டு அந்த நபரை தேடி வருகின்றனர். ஆனால் முகம் முழுவதும் கருப்பு நிற மாஸ்க் அணிந்து, கர்ச்சீப் கட்டியிருந்த நிலையில் அந்த நபர் யார் என்பதை கண்டுபிடிப்பது மிகவும் சவாலாக உள்ளது. இந்நிலையில் இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Robber #Bank #Slip note
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story