×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உலக அழிவுக்கு இதுதான் ஆரம்பமா? 2000 வருஷத்துக்கு piraku பிறந்த சிவப்பு கன்றுக்குட்டி! பீதியில் மக்கள்.... வைரலாகும் வீடியோ!!!

இஸ்ரேலில் 2000 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்ததாக கூறப்படும் சிவப்பு கன்றுக்குட்டி உலக முடிவு குறித்து புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. மத நம்பிக்கைகள் மற்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பு.

Advertisement

உலக முடிவு குறித்த கணிப்புகள் மற்றும் மத நம்பிக்கைகள் காலம் காலமாக மனிதர்களிடையே ஆர்வத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் இஸ்ரேலில் பிறந்ததாக கூறப்படும் ஒரு சிவப்பு கன்று இந்த விவாதங்களை மீண்டும் உலகளவில் பேசப்படும் தலைப்பாக மாற்றியுள்ளது.

மாயன் காலண்டர் பீதியை நினைவூட்டும் சம்பவம்

2012-ஆம் ஆண்டு மாயன் காலண்டர் முடிவடைவதால் உலகம் அழியும் என்ற கணிப்புகள் உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தியிருந்தன. அதேபோன்று இப்போது இஸ்ரேலில் சுமார் 2,000 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்ததாகக் கூறப்படும் சிவப்பு நிறக் கன்றுக்குட்டி மீண்டும் உலக அழிவு குறித்த விவாதங்களை தூண்டியுள்ளது.

மத நூல்களில் உள்ள குறிப்புகள்

யூத மற்றும் கிறிஸ்தவ மத நூல்களின் படி முழுமையாக சிவப்பு நிறத்தில் பிறக்கும் கன்றுக்குட்டி, உலக முடிவு அல்லது மசிஹா எனப்படும் தெய்வீகத் தூதரின் வருகைக்கான அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்த Red Heifer குறித்து மத அறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆர்வத்துடன் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கசிந்த ரகசிய வீடியோ! அமெரிக்கா ஏவுகணை மீது மோதிய பறக்கும் தட்டு! அப்போ ஏலியன்கள் இருக்குதா? வெளியான வீடியோவால் பரபரப்பு...

டெம்பிள் இன்ஸ்டிடியூட் ஆய்வு

எருசலேமில் உள்ள Temple Institute இந்த அபூர்வக் கன்றுக்குட்டியை ஆய்வு செய்து வருகிறது. அது முழுவதும் சிவப்பு நிறத்தில்தானா இருக்கிறது அல்லது வேறு நிறங்கள் கலந்துள்ளதா என்பதை நிபுணர்கள் விரிவாக பரிசோதித்து வருகின்றனர். இந்த ஆய்வு முடிவுகள் குறித்து பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஒருபுறம் இது சாதாரண இயற்கை சம்பவம் மட்டுமே என சிலர் கருதினாலும், மறுபுறம் இஸ்ரேல் மற்றும் அண்டை நாடுகளுக்கிடையே நிலவும் பதற்றமான சூழ்நிலைகளின் மத்தியில் இந்த சிவப்பு கன்று பிறந்தது ஒரு முக்கிய அறிகுறி என சிலர் கூறுகின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் இந்த நிகழ்வு தற்போது பரபரப்பான விவாதமாக மாறியுள்ளது.

 

இதையும் படிங்க: முதல் முறையாக ஸ்பெயினில் கண்டுபிடிக்கபட்ட வெள்ளை பூனைப் புலி! வைரல் வீடியோ...!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Red Heifer #Israel #சிவப்பு கன்று #End Times Debate #Temple Institute
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story