அடேங்கப்பா... ஒரே பிரசவத்தில் இத்தனை குழந்தைகளா? அந்த அம்மாவின் ஒட்டுமொத்த குழந்தைகளின் எண்ணிகையை பாருங்க! நெகிழ்ச்சி சம்பவம்...
மும்பை சத்தாரா மாவட்டத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த அதிர்ச்சி சம்பவம். தாய், சேய் இருவரும் நலமாக உள்ளனர்.
மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், மும்பை சத்தாரா மாவட்டத்தில் அரிதான பிரசவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கர்ப்பிணி பெண் ஒருவர் ஒரே நேரத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் தற்போது அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை
சத்தாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் கோரேகாவ் பகுதியைச் சேர்ந்த காஜல் விகாஸ் ககுர்தியா என்ற கர்ப்பிணி பெண் மூச்சுத் திணறல் மற்றும் பிரசவ வலியால் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அவரின் வயிற்றில் நான்கு குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.
அறுவை சிகிச்சை மற்றும் குழந்தைகள் பிறப்பு
தாயின் உடல் நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனை டீன் டாக்டர் விநாயக் காலே தலைமையில் நடந்த இந்த சிகிச்சையில், 3 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தை வெற்றிகரமாக பிறந்தனர். தாய், சேய் இருவரும் நலமாக உள்ளனர் என்று மருத்துவர்கள் உறுதியளித்துள்ளனர்.
இதையும் படிங்க: பிஸ்கட்டை, டீயில் நனைத்து சாப்பிட்ட 3 வயது பிஞ்சு துடி துடித்து பலி.! என்ன நடந்தது.?!
குடும்பத்தில் மகிழ்ச்சி
ஏற்கனவே மூன்று குழந்தைகள் பெற்றிருந்த காஜல், இந்த பிரசவத்தில் மேலும் நான்கு குழந்தைகளை பெற்றதால், மொத்தம் ஏழு பிள்ளைகளின் தாயாகியுள்ளார். ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்தது அப்பகுதி மக்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தாரா மாவட்டத்தில் நடந்த இந்த அரிதான நிகழ்வு, மருத்துவர்களின் திறமைக்கும், தாயின் மன வலிமைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக மக்கள் பாராட்டுகின்றனர்.
இதையும் படிங்க: மரணித்த குழந்தை.. உயிருடன் பிறந்த அதிசயம்.. GH மருத்துவர்கள் அலட்சியம்.!