தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வீடியோ : பிரீமியர் லீக் வெற்றி பேரணியில் திடீரென ரசிகர்களின் மீது அதிவேகமாக மோதிய கார்! கூட்டத்தில் மக்கள் காற்றில் பறக்கும் அதிர்ச்சி வீடியோ காட்சி...

வீடியோ : பிரீமியர் லீக் வெற்றி பேரணியில் திடீரென ரசிகர்களின் மீது அதிவேகமாக மோதிய கார்! கூட்டத்தில் மக்கள் காற்றில் பறக்கும் அதிர்ச்சி வீடியோ காட்சி...

premier-league-victory-parade-car-crash Advertisement

பிரீமியர் லீக் வெற்றி பேரணியில் திடீர் விபத்து. ரசிகர்கள் மீது கார் மோதியது!

இங்கிலாந்தின் லிவர்பூல் கால்பந்தாட்ட அணியினர் பிரீமியர் லீக் கோப்பையை வென்று, பெருமிதத்துடன் வெற்றி விழா பேரணியில் ஈடுபட்டனர். கோப்பையுடன் வண்ணமயமான பேருந்தில் சென்ற வீரர்கள், நகரின் முக்கிய பகுதிகள் வழியாக ரசிகர்களுடன் உற்சாகமாக மகிழ்ந்தனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அந்த பேரணிக்கு சாலைகள் ஓரமாகத் திரண்டு, தங்கள் அபிமான வீரர்களுக்கு உற்சாக வாழ்த்து கூறினர்.

பேரணியில் திடீரென விபத்து

இந்த உற்சாக பேரணிக்கு சற்றும் எதிர்பாராத விதமாக ஒரு கார், அதிவேகமாக ரசிகர்கள் கூட்டத்துக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக மோதியது. குறைந்தது 50 பேர் காயமடைந்த நிலையில், 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது.

விபத்து நடந்தது எப்படி?

உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு ஃவீன்ஸ் டிரைவில் தொடங்கிய இந்த பேரணி, ப்ளெண்டல் ஸ்ட்ரீட் வரை 15 கிலோமீட்டர் தூரம் திட்டமிட்டு நடந்தது. வழிமுறையை கடைப்பிடித்துக்கொண்டு சென்ற பேரணியின் நடுவே, ஒரு கார் திடீரென ரசிகர்கள் நடுவே புகுந்து சிலரை மோதியது.

இதையும் படிங்க: Video: புயலில் சிக்கிய விமானம்! பயணிகளின் அலறல் சத்தம்! அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி....

அங்கிருந்தவர்கள் உடனே காரை சுற்றி வளைத்து தாக்கினர். அதன்பின் ஓட்டுனர் மீண்டும் காரை ஸ்டார்ட் செய்து, பார்வையாளர்கள் மீது வாகனத்தை செலுத்தியதால்தான் காற்றில் சிலர் தூக்கி வீசப்பட்டனர். இதனால் வெறித்தனமாகக் கார் மீது குதித்த மக்கள், அதை தாக்கத் தொடங்கினர்.

போலீசின் உடனடி நடவடிக்கை

விபத்து நடந்ததும் போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து, கோபம் கொள்ளும் ரசிகர்களை அமைதிப்படுத்தி, காரின் ஓட்டுநரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் 53 வயதுடைய நபர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தீவிரவாதம் இல்லை – போலீசார் உறுதி

இந்த சம்பவத்தில் எந்தவொரு தீவிரவாத தொடர்பும் இல்லை என்றும், தனிநபர் மட்டுமே இந்த தாக்குதலுக்கு பொறுப்பெடுத்துள்ளார் என்றும் அதிகாரப்பூர்வமாக காவல்துறை தெரிவித்துள்ளது. 20 பேருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு, 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு குழந்தை உட்பட இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

சமூக ஊடகங்களில் வீடியோ வைரல்

இந்த தாக்குதலின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. விபத்திற்கான முழுமையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

இதையும் படிங்க: பூனையை கைது செய்த போலிசார்! பூனை செய்த தவறு என்ன தெரியுமா?

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Victory Parade Accident #Liverpool FC parade accident #UK fan incident
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story