இந்த மனசு யாருக்கு வரும்... கோவில் முன் அமர்ந்திருந்த 8 மாத கர்ப்பிணி பெண்! உணவுக்கு பதில் அந்த பெண் கேட்ட உதவி! அலைந்து திரிந்து அந்த பெண்ணை மகிழ வைத்த இளம்பெண்! நெகிழ்ச்சி வீடியோ!!!
கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஸ்கேன் செய்ய பணம் இல்லாத நிலையில், ஒரு இளம்பெண் உதவி செய்த நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கர்ப்பிணிப் பெண்ணின் வேண்டுகோளை கேட்டதும் உதவிக்கரம் நீட்டிய இளம்பெண்ணின் செயல் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. கோவில் வாசலில் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணுக்கு உணவு அல்ல, மருத்துவ பரிசோதனைக்கான பணம் தேவைப்பட்டதாக கூறிய காட்சி பலரையும் நெகிழ வைத்துள்ளது.
உணவுக்கு பதில் மருத்துவ உதவி கோரிக்கை
கோவில் முன்பு அமர்ந்திருந்த 8 மாத கர்ப்பிணிப் பெண்ணை பார்த்த இளம்பெண், முதலில் உணவு பொருள் வழங்க முனைந்தார். ஆனால் அந்தப் பெண், தன்னிடம் உணவு வேண்டாம் என்றும், Ultrasound Scan செய்ய பணம் மட்டுமே தேவைப்படுவதாகக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். கணவர் அருகில் இல்லாத நிலையில், வறுமை காரணமாக இதுவரை ஒருமுறையும் ஸ்கேன் செய்ய முடியவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மருத்துவமனை தேடி அலைந்த இளம்பெண்
இதையடுத்து, அந்தப் பெண்ணை தனது காரில் அழைத்துச் சென்ற இளம்பெண், பல தனியார் மருத்துவமனைகளில் முயன்றும் முடியாத நிலையில், இறுதியாக அரசு மருத்துவமனையில் ஸ்கேன் செய்து வைத்தார். பரிசோதனை முடிவில் குழந்தை நலமாக இருப்பது உறுதியானதும், அந்தப் பெண்ணின் முகத்தில் தெரிந்த நிம்மதி அங்கிருந்தவர்களை உருக வைத்தது.
இதையும் படிங்க: அட... இப்படி ஆச்சே! கண்டாமிருகத்தை விடாமல் துரத்தி பின்தொடர்ந்த சிறுத்தை! வெளியேறிய வாயு.... அடுத்து நடந்ததை பாருங்க! வைரலாகும் வீடியோ..!!!
மருத்துவ உதவியுடன் நின்றுவிடாமல், அந்தப் பெண்ணின் குடிசை வீட்டிற்குச் சென்று ஏர்-கூலர் மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்களையும் வழங்கினார். மேலும், “இனிமேல் நீ என் பொறுப்பு” என்று கூறி அணைத்துக் கொண்ட தருணம் வீடியோவில் பதிவு ஆகியுள்ளது. இந்த viral video தற்போது கோடிக்கணக்கான பார்வைகளை பெற்று, மனிதாபிமானம் இன்னும் உயிருடன் இருப்பதை நினைவூட்டுகிறது.
இதையும் படிங்க: நம்பவே முடியல... பிறந்த கொஞ்ச நேரத்துலயே கையை ஊன்றி உட்கார்ந்த குழந்தை! அதிர்ச்சியில் உறைந்து போன நர்ஸ்.... தீயாய் பரவும் வீடியோ!!!