தாய்ப்பால் குடித்த அடுத்தகணமே துடிதுடித்த பச்சிளங்குழந்தை! பின் நேர்ந்த வியக்கவைக்கும் ஆச்சர்ய காரியம்!
police in brazil to save desparately battle choked newborn baby
பிரேசில் சாவோ பாலோ பகுதியை சேர்ந்தவர் எல்விஸ். அவரது மனைவி கிறிஸ்டினா மார்க்ஸ். அவர்களுக்கு லூகாஸ் என்ற கைக்குழந்தை உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் திடீரென குழந்தையின் உடல் முழுவதும் சிவப்பு நிறமாக மாற துவங்கியது. மேலும் குழந்தை சுவாசிக்க முடியாமல் திணறியுள்ளது.
இந்நிலையில் பதறிப்போன தம்பதியினர் குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு இருந்த மூன்று போலீசார்கள் குழந்தையின் நிலையை கண்டு அதற்கு முதலுதவி அளிக்க முன்வந்தனர்.
அப்பொழுது ஒருவர் குழந்தையின் சுவாச நிலையை கவனித்து, முதலுதவி அளித்துக் கொண்டிருக்கும் நிலையில் குழந்தைக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெண் அதிகாரி குழந்தையின் வாயில் வாய் வைத்து சுவாசமூட்ட முயற்சி செய்துள்ளார். மேலும் மற்றொருவர் முதுகில் தொடர்ந்து தட்டிக் கொண்டே இருந்துள்ளார். அதனைத்தொடர்ந்து ஒரு சில நிமிடங்களிலேயே குழந்தை நலமடைந்தது.
இதுகுறித்து அவரது பெற்றோர்கள் கூறுகையில் தங்களது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த சில நிமிடங்களிலேயே குழந்தையின் உடல் முழுவதும் சிவப்பு நிறமாக மாறி, மூச்சு விட பெருமளவில் சிரமபட்டதாக கூறியுள்ளனர்.