×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மூளை அறுவைசிகிச்சையின் போது நோயாளி செய்த காரியத்தை பார்த்தீர்களா! ஆச்சரியத்தில் மூழ்கிய மருத்துவர்கள்! வைரலாகும் புகைப்படம்!

Patient take selfie while brain surgery

Advertisement

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜிம் மர்பி என்ற 54 வயது நபர், மூளைக்கட்டியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் அறுவைசிகிச்சைக்காக ஹல் ராயல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மூளைப்பகுதியில் மட்டும் மயக்க மருந்து கொடுத்து, சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக அறுவை சிகிச்சை நடந்தது.

மூளை அறுவை சிகிச்சையின் போது, உணர்வு மறத்துபோகும் அளவிற்கு  நோயாளிக்கு மயக்க மருந்து கொடுப்பதில்லை.மேலும்  நோயாளியின் பயத்தை போக்க அவர்களுக்கு பிடித்த செயல்களை செய்ய அனுமதி வழங்கப்படும்.

இந்நிலையில் அறுவை சிகிச்சையின்போது மர்பிக்கு செல்போனை பயன்படுத்த மருத்துவர்கள் அனுமதி அளித்துள்ளனர். அவர் தனக்கு நடந்த அறுவை சிகிச்சையை செல்போனில் செல்பி எடுத்து அதை வாட்ஸ்-அப் மூலம் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், அறுவை சிகிச்சையின் போது நம்பிக்கையாகவும், தைரியமாகவும் இருக்க வேண்டும் என்று முடிவுசெய்து நான் விழித்திருந்தேன். நான் அறுவை சிகிச்சையை ரசித்தேன். அறுவை சிகிச்சை கருவிகளின் சத்தத்தை மூழ்கடிக்க நான் இசை கேட்டேன். நண்பர்களுடன் பேசினேன் என்று கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#patient #surgery #selfie
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story